கலாய்
Published:Updated:

முடியலடாவ்வ்வ்!

முடியலடாவ்வ்வ்!
பிரீமியம் ஸ்டோரி
News
முடியலடாவ்வ்வ்!

முடியலடாவ்வ்வ்!

முடியலடாவ்வ்வ்!

மாற்றம் என்பதே மாறினாலும் மாறவே மாறாதது இந்த `தலயா...தளபதி?'யாங்கிற சண்டைதான். லாஜிக்கா சண்டை போட்டாக்கூட வேடிக்கை பார்க்கலாம். ஆனால், சில நேரம் அவங்கபோடுற கப்பித்தனமான பால்வாடி சண்டைல்லாம் இருக்கே..! மிடியலை. நீங்களே பாருங்க...

• தமிழ் எழுத்தின் முதல் எழுத்து அ, எங்க தலயோட முதல் எழுத்தும் அ. அதனால எங்க `தல' தான் எப்போதுமே கெத்து!

• கோட்டு போட்டு நடிக்கிறதுல தமிழ்நாட்டு ஜேம்ஸ்பாண்ட் தல தான்டா! (அது ஜெய்சங்கர்!)

• `thalapathi'னு இங்க்லீஷ்ல எழுதுறதா இருந்தாலும் எங்க `thala' பேருதான்டா ஃபர்ஸ்ட் இருக்குது தல இல்லாம தளபதியே கிடையாதுடா!

• சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல்லாம் எங்க தலயோட தலைக்கு மட்டும்தான்டா செட் ஆகும். தல தலைசீவி வந்தா தமிழ்நாடே தெறிக்கும்டா!

• வேதாளத்துல தெறிக்கவிடலாமானு எங்க தல சொன்னதை காப்பியடிச்சுதான்டா `தெறி'னே நீங்க டைட்டில் வெச்சீங்க. அது தெரியுமா உங்களுக்கு?

மங்காத்தாடாவ்வ்வ்!

முடியலடாவ்வ்வ்!

• விஜய்யோட முதல் எழுத்து v. v னா ‘விக்டரி’. எப்போதுமே எங்க தளபதி பக்கம்தான் வெற்றி தளபதிக்கு மட்டும்தான்டா வெற்றி. (தலையெழுத்துடா)

• பாட்டுப்பாடிக்கிட்டே ஆடுறதுல தமிழ்நாட்டின் மைக்கேல் ஜாக்ஸன் எங்க தளபதிதான்டா! (அது பாகவதர் இல்லையா?)

• `thalapathi'னு எழுதி படிச்சுப்பாருடா எங்க தளபதி பேருக்கு உள்ளே உங்க `thala'யே அடக்கம்டா தளபதிடா கெத்துடா.(#RIP_english )

• என்னது ஹேர்ஸ்டைலா? ஹேர்ஸ்டைலை பத்திலாம் நீங்க பேசவே கூடாதுடா. எங்க தளபதி மாதிரி ஹேர்ஸ்டைல் பண்ண சீப்பே தேவை இல்லைடா. கையாலேயே கோதிவிட்டுட்டு போகமுடியுமாடா உங்களால?

• வேதாளமாக எங்க தளபதி நடிச்ச `புலி' படத்தைப் பார்த்துட்டுதான்டா. நீங்க வேதாளம்னே பேரு வெச்சீங்க மொதல்ல அது தெரியுமாடா உங்களுக்கு? (அவ்வ்வ்வ்!)

துப்பாக்கிடாவ்வ்வ்!

- ஜெ.வி.பிரவீன்குமார்