கலாய்
Published:Updated:

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

ஃபேஸ்புக்கில் நாம் கேட்ட கேள்விகளுக்கு வாசகர்கள் அளித்த சுவாரஸ்யமான பதில்கள்...

பதில் சொல்லுங்க பாஸ்!

மக்கள் நலக் கூட்டணியின் கதையைத் திரைப்படமாக எடுத்தால் என்ன டைட்டில் வைக்கலாம்? ஜாலியான தலைப்புகள் வரவேற்கப்படுகின்றன...

வெங்கடேஷ் : எப்படி இருந்த நாங்க இப்படி ஆய்ட்டோம்?

ஜெயபிரசாத்: நாலு பேரும் நல்லா இருந்த கேப்டனும்.

ராஜ்கமல் : இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? ( A full length comedy entertainer).

சண்முக சுந்தரம் : வஞ்ச தந்திரம்.

தல வேலு : கண்ணா டெபாசிட் போக ஆசையா?

சாய்ராம் : நாலு பேரு நாலுவிதமா...

அந்தோணி : ஆப்பு கண்ணுக்குத் தெரியாது.

சஞ்சீவ் : பாண்டவர் பூமி பார்ட் 2.

பதில் சொல்லுங்க பாஸ்!

நடிகர் சங்கப் பஞ்சாயத்துகள் தீர்ந்து, விக்ரமன் பட க்ளைமாக்ஸ் போல எல்லோரும் கைகோக்க, ஜாலியான ஐடியா சொல்லுங்க பாஸ்!

முருகவேல் : வேண்டுமானால் மீண்டும் விக்ரமனையோ, ராஜகுமாரனையோ அழைத்து அனைத்து நடிகர்களும் இணைந்து இருப்பதுபோல சினிமா எடுக்கலாம். எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை... லாலலா...!

ரவிசங்கர் : அதெல்லாம் அவ்வளவு சீக்கிரம் தீரும் பிரச்னை கிடையாது. வேணும்னா சங்கத்தோட பேரை மாத்திட்டா புதுப் பஞ்சாயத்து ஆரம்பிச்சுரும். பழைய பஞ்சாயத்து மறந்துவிடும்.

முத்துராஜ் : மனிதச் சங்கிலிப் போராட்டம்தான் நடத்தச் சொல்லணும். அப்போவாச்சும் கைகோத்துப்பாங்களே!

 ஆண்ட்ராய்டு, ஐ-போன் மொபைல்களைப் பயன்படுத்துவதற்கு முன்/பின் நமக்குள்ள என்ன மாற்றம் வந்திருக்கு? `பன்ச்' பதில்கள் வரவேற்கப்படுகின்றன.

கௌதம் ராஜ் : அப்போ போன் நம்பர்களை மனதில் பதிஞ்சு வெச்சோம். இப்போ 64ஜி.பி. எக்ஸ்பாண்டபிள் மெமரியில் சேவ் பண்றோம்.

சின்னராஜா : `பேப்பர்ல பார்த்தியா பங்கு?'னு கேட்டது போய், இப்போ `ஃபேஸ்புக்ல பார்த்தியா பங்கு?'னு கேட்குறோம்.

சண்முக சுந்தரம் : ப்ளே க்ரௌண்ட்ல விளையாடுனது அந்தக் காலம். ப்ளே ஸ்டோர்ல டவுன்லோட் பண்ணி விளையாடுறது இந்தக் காலம்!

ப்ரீத்தி விவேக் : என்னத்த சொல்ல... முன்னாடிலாம் சார்ஜர் எங்கனு தேடிட்டு இருப்பேன். ஆனா, இப்போ ப்ளக் பாயின்ட் பக்கத்துலேயேதான் இருக்கேன்.

பதில் சொல்லுங்க பாஸ்!

மனைவி சீரியல் பார்க்கும் சமயத்தில்தான், கிரிக்கெட் மேட்ச்சில் இந்தியா அபாரமாக ஆடிக்கொண்டிருக்கும். இந்தத் தருணங்களில், மனைவியிடம் இருந்து ‘ரிமோட்’டைக் கைப்பற்ற, கலர்ஃபுல்லான ஐடியா கொடுங்க பாஸ்!

கார்த்திக் ராஜ் : அதை வாங்குறதும் ஒண்ணுதான், வெறிநாய் வாலை மிதிக்கறதும் ஒண்ணுதான்! அதுக்குப் பதிலா நான் அடுத்த நாள் ஹைலைட்ஸ் பாத்துக்குவேன்.

சரத்குமார் : கிரிக்கெட் மேட்ச் ஒளிபரப்புக்கு இடையே கேட்கப்படும் கேள்விக்கு பதிலளித்தால் வைர நெக்லஸ் பரிசு உண்டுனு ஆசை காட்டினால் பலன் கிடைக்கலாம். குறிப்பு: மேட்ச் முடிந்த பிறகு ஏற்படும் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பேற்காது.

செல்லா சங்கர் : `ஷாப்பிங் போகலாம்... போய்க் கிளம்பிட்டு வா'ன்னு சொன்னால் போதும். கிளம்பி வர்றதுக்குள்ள மேட்ச் முடிஞ்சுரும். ஆனா, ஐடியா கொஞ்சம் காஸ்ட்லி.

வால்டர் ராபின்சன் : இப்போ ஐடியா சொன்னா நல்லாத்தான் இருக்கும். அடுத்த நாள் ஞாபகம் வந்து ஏதாவது பண்ணப்போய்ப் புரட்டி எடுக்குறப்ப இந்த உசுரு எங்க போகும்? என்ன பண்ணும்?

ப்ரேம் விஜய் : ஸ்கோரு முக்கியமா இல்லை சோறு முக்கியமான்னு பார்த்தா சோறுதான் பாஸ் முக்கியம். பேசாம சரணடைய வேண்டியதுதான்!