கலாய்
Published:Updated:

ஆலுமா லோனுமா...

ஆலுமா லோனுமா...
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலுமா லோனுமா...

ஆலுமா லோனுமா...

ஆலுமா லோனுமா...

`பெர்சனல் லோன் கொடுக்கிறதுக்குக்கூட இனிமே உங்க சோஷியல் மீடியா ஆக்டிவிட்டியெல்லாம் செக் பண்ணிட்டுத்தான் கொடுப்போம்'னு சில நிதி நிறுவனங்கள் அறிவிச்சிருக்காங்க. இப்படியே போனா இன்னும் என்னென்ன அக்கப்போர்களெல்லாம் பண்ணுவாங்கனு நினைச்சுப்பார்த்தா அவ்வ்வ்...

• ரோட்டுல போறப்போ யாருக்காவது தர்மம் பண்ணினாக்கூட நம்மளைக் கண்காணிச்சு, `இப்படி சம்பாதிக்கிற காசையெல்லாம் தானம், தர்மம் பண்ணா... வாங்குற லோனை எப்படிக் கட்டுவ? அதனால, உனக்கு லோன் இல்லை. போயிட்டு வா''னு சொன்னாலும் சொல்வாங்க!

• ``எந்த நேரமும் ஃபேஸ்புக்ல ஆன்லைன்லயே இருக்கிறியே... உன்னையெல்லாம் நம்பி லோன் கொடுத்துட்டு நாங்க என்ன  லைக்ஸையும், கமெண்ட்ஸையுமா வாங்கிட்டுப் போறது? யூ கெட் அவுட் மேன்''னு சொல்லி, கழுத்தைப் பிடிச்சு வெளியில் தள்ளினாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை பாஸ்!

• ``நேர்ல பார்த்தா 70-ல் வந்த ஈஸ்ட்மென் கலர் படம் மாதிரி `ஙே'ன்னு இருக்குற நீ, ஃபேஸ்புக்குல போட்டோஷாப் பண்ணி, பொங்கலுக்கு ரிலீஸ் ஆன புதுப்படம் மாதிரி ஜம்முனு இருக்க. ஸோ, போட்டோலயே இவ்வளவு தில்லாலங்கடி வேலையெல்லாம் பார்க்கிறியே... நாளைக்கு லோனை வாங்கிட்டு நான் அவனில்லைனு சொல்லி லோ லோன்னு எங்களை அலையவிட மாட்டேங்கிறது என்ன நிச்சயம்''னு இன்னும் கொஞ்சம் அட்வான்ஸாகப் போய் லோன் அப்ளிகேஷனை ரிஜெக்ட் பண்ணலாம்!

• இந்த அளவு வந்தவங்க போனை மட்டும் விட்டுவைப்பாங்களா என்ன? ``கிரெடிட்டா வாங்கிய 10 ரூபாய் டாக் டைம் பேக்கையே 34 மணி நேரத்துக்குப் பிறகுதான் ரீ சார்ஜ் பண்ணி சரி கட்டியிருக்க. 10 ரூபாய்க்கு 36 மணி நேரம் ஆகுதுனா, ஒரு லட்சத்துக்கு இத்தனை மாதத்துல, இத்தனை தவணையில, இந்த விகிதத்தில் போனா..''ன்னு ராமானுஜரின் கணிதமே குழம்புற அளவுக்குக் குழம்பி கண்ணுல தண்ணிவர வெச்சாலும் வைப்பாங்க. (நோ... அவசர லோன் வாங்குறவங்க அழக் கூடாது!)

• லோனுக்கு அப்ளை பண்ணியவங்களைக் கூப்பிட்டு வெச்சு ``உங்களுக்கு டப்ஸ் மாஷ் பண்ணத்தெரியுமா? மீம்ஸ் பண்ணத்தெரியுமா? கல்பனா அக்காவைத் தெரியுமா? மடோன்னா செபஸ்டியானைத் தெரியுமா''னு கேள்விகள் கேட்டு லோனுக்கு செலெக்ட் பண்ணலாம். இதெல்லாம் எதுக்குனுதானே கேட்கிறீங்க? ஏன், எதுக்குனு கேட்கக் கூடாது. இனிமே எல்லாம் அப்படித்தான்!

• அப்புறம்  சொல்ல மறந்திட்டேன், இந்தக் கவுண்டமணி ஸ்டைல்ல ``உங்க பேரு என்னது காத்தமுத்தா? `கா'வன்னால ஆரம்பிக்கிற மாதிரி பேரு வெச்சவங்களுக்கெல்லாம் லோன் கிடையாது. கலர் சட்டை போட்டவங்களுக்கெல்லாம் லோன் கிடையாது''னு சொல்லி அனுப்பினாலும் ஆச்சர்யமே படக்கூடாது மக்களே... ஏன்னா அதுவும்கூட டிசைன்ல இருக்கு. ஆங்..!

- ஜெ.வி.பிரவீன்குமார்