கலாய்
Published:Updated:

சீக்கிரம் எந்திரிச்சா...

சீக்கிரம் எந்திரிச்சா...
பிரீமியம் ஸ்டோரி
News
சீக்கிரம் எந்திரிச்சா...

சீக்கிரம் எந்திரிச்சா...

சீக்கிரம் எந்திரிச்சா...

டிக்கிற அலாரத்துக்கு அடிக்கடி வாய்தா கொடுத்து எட்டு மணி வரைக்கும் தூங்கிட்டு, அப்புறமா அடிச்சுப்பிடிச்சு ஆபிஸ் கிளம்புற இனம் நாம! விதியோட சதியால ஒரேயொரு நாள் சீக்கிரம் எந்திரிச்சா என்னவெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கு தெரியுமா..?

சுருக்கமா வைரமுத்து ஸ்டைல்ல சொன்னா... சிக்னல் எல்லாம் பச்சை காட்டும். பூக்கள் உதிர்ந்து வரவேற்கும். பைக் சாலையில் வேகமாய்ப் பாய்ச்சல் எடுக்கும். கன்னிகள் மட்டுமில்லாமல் உலகமே அழகாய்த் தெரிய ஆரம்பிக்கும். நாலஞ்சு அலாரம் செட் பண்ணி ஒரே ஒருநாள் சீக்கிரம் எந்திரிச்சுதான் பாருங்களேன் பாஸ்!

ஆபிஸ் கிளம்பி வர்ற ஆன்ட்டிகளைப் பார்த்தே சைட் அடிச்சுப் பழக்கப்பட்ட நமக்கு காலேஜ் போற ஃபிகர் கண்ல படும். அப்புறமென்ன... வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். காலம் காலமா இதத்தானே பண்றோம் நாம!

சீக்கிரம் எந்திரிச்சா...

ஆபிஸ்ல யார், யாரோட கடலை போடறாங்க... எங்கல்லாம் லவ் எபிசோட் ஓடுதுன்ற தெளிவு பிறக்கும். அதுக்கப்புறம் அவங்ககூட அன்னம் தண்ணி பொழங்கக்கூடாதுன்ற உன்னத முடிவெடுக்க முடியும். விக்டர் நாம கெத்துதான!

சீக்கிரம் எந்திரிச்சா...

புழுதி படிந்த நம் ஏரியா... கெளதம் மேனன் படங்களில் வருவதுபோல திடீரென ரம்யமாய்த் தெரியும். உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து ஜெஸ்சியும் கூட கண்ணில் படலாம். அதிர்ஷ்டமா? அது இருந்தா நாங்க ஏன் இப்படி சிங்கிளா திரியுறோம்ன்னு மைண்ட்வாய்ஸ் வந்தா சியர்ஸ் சொல்லிக்கோங்க.

ஆறிப்போன சாம்பாரிலேயே நாலைந்து இட்லியை ஊறப்போட்டு உள்ள தள்றவங்க நாம! சட்னி, சாம்பார் சூடா கிடைச்சா... ஏழெட்டு இட்லியை ராஜ்கிரணா மாறி வகை தொகையில்லாம வஞ்சகமில்லாம சாப்பிட வாய்ப்பிருக்கு.

சீக்கிரம் எந்திரிச்சா...

ரேஸ் மைதானத்துல நாம மட்டும் நடந்துபோறது மாதிரி ஃபீல் கொடுத்த வழக்கமா வர்ற நெருக்கடியான சாலை, திடீர்ன்னு அனாமத்தா கெடக்குற மாதிரி தெரியும். வழிமாறி வேற இடத்துக்கு வந்துட்டோமான்னு ஒரு தடவைக்கு ரெண்டுதடவ யோசிக்க வைக்கும்.

- கருப்பு