கலாய்
Published:Updated:

ஐடியா ஐயா!

ஐடியா ஐயா!
பிரீமியம் ஸ்டோரி
News
ஐடியா ஐயா!

ஐடியா ஐயா!

ஐடியா ஐயா!

ப்போதெல்லாம் சாதாரண ஜவுளிக்கடையிலிருந்து பெரிய பெரிய தயாரிப்புகள் வரை... அனைத்திற்கும் விதவிதமா விளம்பரம் பண்றதுக்குதான் ஐடியா தேடிட்டு இருக்காங்க. அவங்களுக்காக அல்டிமேட் அட்டகாசமான ஐடியாக்களைக் கொஞ்சம் பார்ப்போமா?

• கல்யாணப் பந்தி அப்பளத்துல விளம்பரம் பண்ணிட்டாங்க... ஆனால் வாழை இலையில் இன்னும் பண்ணலை. அதை ஏன் விட்டுவைக்கணும்? அதுல பிரிண்ட் பண்ணினால் அத்தனை பேரும் சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள நம்ம விளம்பரமும் மனப்பாடம் ஆகிடுமே!

• விளம்பரத்துக்காக யார் யாரையோ புடிச்சி சம்பளம் கொடுக்கிறதுக்குப் பதிலா, வீட்டுக்கு வீடு கிசுகிசு பேசுற பாட்டிமார்கள் இருக்காங்களே... அவங்களைப் புடிங்க! அவங்க சொல்றதைத்தான் இப்போவரைக்கும் இந்த உலகமே நம்பிட்டு இருக்கு. அவங்களைக் கூப்பிட்டு நம்ப வெச்சாலே போதும். அப்புறம் தன்னால பரவிடும்!

ஐடியா ஐயா!

• தியேட்டர்களில் எதுக்கு ஒரே ஒரு இடைவேளை? டி.வி மாதிரி பதினஞ்சு நிமிஷத்துக்கு ஒரு இடைவேளை போடச் சொல்லுங்க. அந்தக் கேப்புல விளம்பரம் பண்ணுங்க பாஸ்! #எப்பூடி?

• குறி சொல்லும் சாமியார்கள், ஜோசியர்களையெல்லாம் புடிங்க! இந்த புராடெக்ட்டை அடுத்த ஆறு மாசத்துக்குப் பயன்படுத்தினால்தான், நல்லது நடக்கும்னு அடிச்சு சொல்லச் சொல்லுங்க. அப்புறமென்ன? அப்டியே அந்த புராடெக்ட்டுக்கு அவங்களைப் பழக்கப்படுத்திடலாம். அடுத்து புதுசா இன்னொரு வெர்ஷனை ரிலீஸ் பண்ணிடலாம். ஏன்னா, இப்பெல்லாம் சாமியார்கள் சொல்ற புராடெக்ட்ஸ்தான் நல்லா சேல்ஸ் ஆகுது!

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்