கலாய்
Published:Updated:

கொக்கிபீடியா - சரத்குமார்

கொக்கிபீடியா  - சரத்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
கொக்கிபீடியா - சரத்குமார்

கொக்கிபீடியா - சரத்குமார்

கொக்கிபீடியா  - சரத்குமார்
கொக்கிபீடியா  - சரத்குமார்

பெயர் : சரத்குமார்

பிறப்பு : 14 ஜூலை, 1954

வயது : 62

இருப்பிடம் : சென்னை

சரத்குமார் என்பவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனரும், திரைப்பட நடிகரும் ஆவா

கொக்கிபீடியா  - சரத்குமார்

ர்.

திரைப் பங்களிப்பு :

சரத்குமார் இதுவரை 130 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ‘நாட்டாமை’ படத்தில் `சம்முவம்', `பசுபதி' என இரண்டு கதாபாத்திரங்களிலும் வெளுத்து வாங்கியிருப்பார். ‘சம்முவம் அந்த உருட்டுக் கட்டைய எடு’ என விஜயகுமார் கண்களை உருட்டும்போது நடிப்பில் பட்டாசு கொளுத்தியிருப்பார். அதிலும் யானைகளுக்கு மத்தியில் நின்றுகொண்டு ‘அடிச்சோட்றா... அடிச்சோட்டு...’ எனச் சொல்லும் அந்தக் காட்சி இன்னும் என் அடிமனதில் கெட்டியாக நிற்கிறது. சிம்மராசி படத்திலோ ‘நாட்டாமை’ படத்தில் வரும் பொன்னம்பலம் கெட்-அப்பில் நடித்து பிரமாதப்படுத்தியிருப்பார். `ஜித்தன்' என்ற படத்தில் ‘ப்ரியா துப்பட்டாவைப் போடு’ என்ற ஒரே வசனத்தை வைத்து ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவைத்திருப்பார். `கோச்சடையான்' படத்தில் செங்கோடகன் எனும் கதாபாத்திரத்தில் நடித்தது சரத்குமாரா, சரத்பாபுவா என்ற குழப்பம் இன்றும் நிலவி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேல் இந்தத் தமிழ்கூறு நல்லுலகுக்கு இட்லி உப்புமாவைத் தந்ததும் இவர் நடித்த சினிமாதான்.

சாதனைகள் :

இவர் பல சாதனைகளைச் செய்திருக்கிறார். இப்படித்தான் ஒரு விளம்பரத்தில் மட்டன் பிரியாணி குண்டாவில் இருந்து சிக்கன் லெக் பீஸை எடுத்துச் சாப்பிடுவார். எதுவாயினும் பிரித்துப் பொருள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதை ‘தங்கப்ப தக்கம்’ காமெடி மூலம் சீரியஸாக வற்புறுத்தினார். முன்பெல்லாம் மளிகைக்கடையில் கொசுறாகக் கொடுத்துக்கொண்டிருந்த கறிவேப்பிலைக்கு இன்று காசு வாங்குகிறார்கள் என்றால் அதற்கு இவர் ஒரு மிக முக்கியமான காரணம். பிரதமராவதுதான் இவரது லட்சியமாக இருந்தது. ஆனால், அதற்குத் தென்காசியைத் தனிநாடாகப் பிரிக்கவேண்டும் என்கிற காரணத்தினால் அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டார். 

வேதனைகள் :

இவர் கடைசியாக ‘தோஸ்த்’ எனும் திரைப்படத்தில் ரகுவரனோடு பாக்ஸிங் செய்து ஜெயித்துள்ளார். அம்புட்டுதான். அதன் பின்பு சட்டமன்றத் தேர்தலில் இருந்து நடிகர் சங்கத் தேர்தல் வரை அத்தனையிலும் விதி இவரை ஊறப்போட்டு உரித்து எடுத்துவிட்டது.

மேலும் பார்க்க :

ரகசிய போலீஸ்

மானஸ்தன்

சண்டமாருதம்

அடடா அல்வா துண்டு இடுப்பு...

மீசைக்கார நண்பா உனக்கு ரோசம் அதிகம்டா...

மேலும் படிக்க :

கறிவேப்பிலை வரலாறு.

நடிகர் சங்கத்தின் அப்துல் கலாம்.

புரோட்டா மாஸ்டரும் கராத்தே மாஸ்டர் ஆகலாம்.

அம்பு விட்டாரா அர்ஜூனன்?

- ப.சூரியராஜ்