கலாய்
Published:Updated:

ஆண்-பெண் வித்தியாசம்!

ஆண்-பெண் வித்தியாசம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்-பெண் வித்தியாசம்!

ஆண்-பெண் வித்தியாசம்!

ஆண்-பெண் வித்தியாசம்!

ண்களும் பெண்களும் ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்லைனாலும் இருவருக்கும் இடையே ஆறு வித்தியாசங்கள் இல்லை, ஆயிரம் வித்தியாசங்கள் கண்டுபிடிக்கலாம். இங்கே சில சாம்பிள்ஸ்...

• பசங்ககிட்டே ரெண்டே ரெண்டு சட்டையும், ஒரு ஜீன்ஸ் பேன்ட்டும் இருந்தாலே அசராம ஒரு வாரத்துக்கு மாத்தி மாத்திப் போட்டு ஒப்பேத்திருவாய்ங்க. ஆனால், பொண்ணுங்க தங்களோட ட்ரெஸ்ஸிங் ட்ராயர் முழுக்க கலர்கலரா துணிகளை அடுக்கி வெச்சிருந்தாலும் வாரத்தில் கடைசி நாள் வருவதற்குள் `இதிலே எதைப் போடுறது'ன்னு தனியா உட்கார்ந்து தலையைத் தொங்கப்போட்டு ஃபீல் பண்ணுவாங்க.

• பொண்ணுங்களோட ஒர்க்கிங் டேபிள் ஒரு பூ ஜாடியும், பென் ஹோல்டரையும் அழகா அடுக்கி வெச்சு அமாவாசைக்குக் கழுவின கிச்சன் மாதிரி பளிச்சுனு இருக்கும். ஆனால், பசங்களோட ஆபிஸ் டேபிளில் பைக் துடைக்கும் துணியைத் தவிர எல்லாமே சிதறிக் கிடக்கும். ஆயுதபூஜை அன்னிக்குக்கூட பசங்க டஃப் ஃபைட் கொடுக்க முடியாது.

• பொண்ணுங்க பயன்படுத்துற டெஸ்க் டாப் ஸ்க்ரீன்ல மருந்துக்குக் கூட ஒரு இடம் விடாம ஃபோல்டர்களாகவே நிறைஞ்சு கிடக்கும். பசங்களோட டெஸ்க்டாப் வால்பேப்பர்ல டீ-ஃபால்ட்டா இருக்கிற நாலைஞ்சு ஐகான் மட்டும்தான் இருக்கும். அதையும் அழிக்க முடியாம ஆத்திரத்தோடு மிச்சம் வெச்சிருப்பாய்ங்க.

ஆண்-பெண் வித்தியாசம்!

• மாசத்துல ஒருவாட்டி முடிவெட்டுறதுக்கு சலூன் பக்கம் போய்ட்டு வீட்டுக் கண்ணாடியில் வந்து பார்த்தா நமக்கே நம்மை அடையாளம் தெரியாது. அதுக்கே ஐம்பது ரூபாதான் வாங்கியிருப்பாய்ங்க. ரெண்டு மாசத்துக்கு ஒருவாட்டி லைட்டா அரை இஞ்ச் முடியை வெட்டுறதுக்கு லேடீஸ் பார்லர்ல ஐந்நூறு ரூபாயைத் தீட்டிருவாய்ங்க . பட், நோ சேஞ்ச்.

• பசங்க பத்துநாள் ஃபேஸ்புக் போகலைன்னாலும் புதுசா லாகின் பண்ணினா ரெண்டு நோட்டிஃபிகேஷன் காட்டுறதே பெரிசு. அதுவும் நாம யாருக்கோ கமென்ட் பண்ணுன போஸ்ட்ல வேற யாரோ கமென்ட் பண்ணுனதா இருக்கும். ஆனால். இந்தப் பொண்ணுங்க ஒரு நாள் ஃபேஸ்புக் பக்கம் தலையைக் காட்டலைன்னாலே இன்பாக்ஸ்லே    `என்னாச்சு தோழி', `ஆர் யூ ஓகே பேபி?' மெசேஜ்களும், நோட்டிஃபிகேஷன்களும் தெறிச்சு போனையே ஹேங் ஆக்கும்.

அடப்பாவமே!

- விக்கி