கலாய்
Published:Updated:

டீல் அந்து போச்சு!

டீல் அந்து போச்சு!
பிரீமியம் ஸ்டோரி
News
டீல் அந்து போச்சு!

டீல் அந்து போச்சு!

டீல் அந்து போச்சு!

புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானோதயம் பொறந்த மாதிரி நாமளும் திடுதிப்புனு திருந்த நினைப்போம். `வெற்றி நிச்சயம்... இது வேத சத்தியம்' பாட்டை இயர்போன்ல போட்டுவிட்டு, உலகத்தையே புரட்டிப்போடும் உத்வேகத்தில் இருந்தாலும், `ஒரு ஓரமாப்போய் உட்காரு'னு இந்த உலகம் நம்மை எப்படியெல்லாம் டீல் பண்ணுதுனு பார்ப்போமா?

*ஜனவரி ஒண்ணாம் தேதியானா ஜிம்முக்குப் போய் லம்ப்பா பணம் கட்டுறதும், கொடுத்த காசுக்காக ஒரே ஒரு வாரம் ஜிம்முக்குப் போயிட்டு கண்ணாடியில் ஆர்ம்ஸை முறுக்கிப் பார்க்கிறதும் பல பேருக்கும் உள்ள கெட்ட பழக்கம். அடுத்த வாரமே ஜிம்முக்குக் கட் அடிச்சுட்டு ஜாலிலோ ஜிம்கானா வாழ்க்கைக்குத் திரும்பிருவோம்ங்கிறது வேற விஷயம்! சரி ஜிம்முக்குத்தான் போக முடியலை. நான்வெஜ் சாப்பிடாம இருப்போம்னு நினைக்கிறப்போ, வீட்டுல கோழிக்குழம்பு வாசம் தூக்கலா அடிக்கும். அப்புறமென்ன? சபதத்தைத் தள்ளி வெச்சுட்டு, அன்னத்துல குழி வெட்டிக் கோழிக்கறியைச் சாத்துவோம்!

*`இனிமே எக்காரணத்தைக்கொண்டும் பொய் சொல்லக்கூடாது சாமி'னு முடிவெடுத்து நல்லவனாதான் வாழ்வோம். ஆனா பாருங்க... பசங்ககிட்ட இதுக்கு முன்னாடி சொன்ன பொய் குட்டிபோட்டு நம்ம முன்னாடி நிற்கும். அதை கன்டினியூ பண்றதுக்காக மறுபடியும் பொய் சொல்ல வேண்டிவரும். இல்லாட்டி நம்ப மாட்டாய்ங்களே!

*ஹேங்க் ஓவர்ல தலைவலி படுத்தியெடுக்கும்போது, `இனிமே சத்தியமா சரக்கு அடிக்கக்கூடாது'னு சபதம் எடுத்திருப்போம். அதுநாள்வரைக்கும் ஓசியில் சரக்கடிச்சவன்கூட ட்ரீட் தர்றதா சொல்லி நம்மை வெறுப்பேத்துவான். சரினு சமர்த்தா சைடு டிஷ் மட்டும் சாப்பிட்டு உட்கார்ந்தாலும், `ஒரேயொரு கட்டிங் போட்டா உன் சபதம் ஒண்ணும் கெட்டுப்போயிடாது'னு சொல்லி ஆசை காட்டுவானுங்க. அப்போ மட்டும் தப்பிச்சிட்டா நாம பொழைச்சோம். இல்ல... ஹேங் ஓவர்தான்!

*புகை நமக்குப் பகைனு ஒரு நல்ல நாள் பார்த்து சிகரெட்டை நிறுத்திடலாம்னு முடிவெடுத்திருப்போம். அந்நேரம்தான், 'என்ன மச்சான் தம்மடிக்கலயா'னு கேட்கிறதோட, மூஞ்சி மேலே புகையை விட்டு நம்மளைக் கை நடுங்க வைப்பாங்க. செஞ்சிருவேன்!

*`என்ன ஆனாலும் பரவாயில்லை. இனிமே ஆபீஸைவிட்டு சீக்கிரமே கிளம்பணும்டா' அப்படினு முடிவெடுத்து முதல்நாள் சீக்கிரம் கிளம்பினாலும் ட்ராஃபிக்ல சிக்கி நாம ஜாம் ஆவோம். அல்லது பஸ்ஸுக்காக ரொம்ப நேரம் குத்த வெச்சு காத்திருக்க வேண்டியிருக்கும். இதுக்கு ஆபீஸ்ல உட்கார்ந்தாலாவது ஃபேஸ்புக் பார்க்கலாம்னு அடுத்த நாளில் இருந்து வழக்கம்போல சீட்டைத் தேய்க்க ஆரம்பிச்சிடுவோம்.

*நமக்கு ஆசைகாட்டி... மனசை மடைமாற்றி... கடைசிவரைக்கும் நம்மைத் திருந்தவிடாம பார்த்துக்கிறதுதான் நண்பர்கள்ங்கிற பேர்ல கூடவே சுத்துற செவ்வாழைகளோட வேலையே! சரிதானே பாஸூ?

நான் என்னைச் சொன்னேன்!

- கருப்பு