கலாய்
Published:Updated:

கேப்ஷன் வைக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்!

கேப்ஷன் வைக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
கேப்ஷன் வைக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்!

கேப்ஷன் வைக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்!

கேப்ஷன் வைக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்!

து குடிக்கிற காட்சிகள் வரும்போது, `குடி குடியைக் கெடுக்கும்' கேப்ஷன் போடுறமாதிரி, வேறு எதற்கெல்லாம் கேப்ஷன் போடலாம்?

• போட்டுக் கொடுக்கிற காட்சிகளுக்கு - துரோகம் கொடுஞ்செயல். சசிகுமார் படங்களைப் பார்க்கவும்! (விளம்பரத்துக்கு விளம்பரம், அட்வைஸுக்கு அட்வைஸ்!)

• டி.வி. சீரியலில் பெண்களைக் கொடுமைப் படுத்தும் காட்சிகள் வரும்போது - பெண்கள் நம் வீட்டின் கண்கள், கொடுமை செய்யாதீர்! (நமக்கும் சேர்த்துதான்)

• சிறுவர், சிறுமிகள் பெரிய மனிதர்களைப்போல வசனம் பேசும் காட்சிகளுக்கு - பிஞ்சிலேயே பழுத்தது. ஓவர் டோஸ் எல்லாம் இல்லை! (நீங்களும் ஆகலாம் சிவாஜி கணேசன்)

கேப்ஷன் வைக்கலாமே ஃப்ரெண்ட்ஸ்!

• பாம்பாக மாறி நாயகி சீறும் காட்சியில் -  பாம்பில் நல்ல பாம்பும் உண்டு. ரொம்ப ரொம்ப நல்ல பாம்பும் உண்டு! (பாம்பையே லவ் பண்ற மனசு கடவுள் பாஸ்)

• மாமியார், மருமகளை வண்டை வண்டையாய்த் திட்டும் காட்சிகளுக்கு - நாவடக்கம் நல்லது. அடுத்த எபிசோடில் நாக்கு அறுபடலாம்! (ஒரே வாரத்தில் கதையே மாறும்)

• டப்பிங் சீரியலின் அழுகாச்சி காட்சியில் - உண்டு சோகம் எல்லா மொழியிலும். கதறி அழுங்கள் சரியாகும்! (இதுதான் அடுத்தவங்க காசில் சூனியம் வெச்சுக்கிறது)

• இப்படியெல்லாம் திரையில் காமிச்சா, படமோ சீரியலோ பார்க்க முடியாது. எல்லோரும் நிம்மதியா இருக்கலாம்!

- இராஜன்