கலாய்
Published:Updated:

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

கதை விடுறாங்க!

``தீபாவளிக்கு ஸ்பெஷல் ஓப்பனிங் ஷோ பார்க்கப்போன அருணுக்கு போன் வந்தது...'' - இந்த ஒருவரியை டெவலப் செய்து, டைம்பாஸ் ஃபேஸ்புக் ரசிகர்கள் எழுதிய குட்டிக் கதைகள் இவை.

சண்முக சுந்தரம் :
அருணின் தம்பி, ``அண்ணா நீ பார்க்கப்போன படத்தை ஃபேஸ்புக் லைவ்ல போடுறாங்க. சீக்கிரம் கிளம்பிவா'' என்றான். இவனும் உடனே காசு மிச்சம்னு வீட்டிற்குக் கிளம்பினான்.

மணிகண்டன் : போன்ல அருணோட அப்பா, ``டேய் நீ வெளியே போனதில் இருந்து பக்கத்து வீட்டுப் புள்ளையும் காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க. சீக்கிரம் வந்து சேருடா'' என்றார். சிக்கிட்டோமே! எப்படி சமாளிக்கிறதுனு யோசிக்க ஆரம்பித்தான் அருண்.

சந்திரசேகரன் : போன் வந்துச்சுனு போனை எடுத்தா, போன் வரல!. ஏன்னா அந்தப் படத்தோட பேரு `வரும் ஆனா வராது'.

நெல்லையப்ப பாண்டியன் :
`எவனோ விட்ட ராக்கெட்ல ஆபீஸ் தீப்பிடிச்சு எரியுது' என வாட்ச்மேன் போனில் கூறினான். தான் அலுவலகத்தில் ஒளித்து வைத்துள்ள லஞ்சப் பணத்தைக் காப்பாற்ற அலுவலகத்திற்கு ஓடினான் அருண். நீதி : வயிறெரிஞ்சு அடுத்தவங்க கொடுத்த பணம் இப்படித்தான் தீயில் எரியும்!

கார்த்திக் ராஜ் :
கட் பண்ணிட்டு படத்தைப் பார்த்தான். ஏன்னா, அவன் போனது வருங்காலத் தமிழக முதல்வர் பவர் ஸ்டார் படத்துக்கு!