உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

பதில் சொல்லுங்க பாஸ்!

?எந்தப் பண்டிகைக்கு நீங்க ரொம்ப உற்சாகமா இருப்பீங்க? ஏன்?

விவேக் : ரம்ஜான், பக்ரீத்... பக்கத்து வீட்டு ‘பாய்’ தரும் பிரியாணி ருசியே தனி பாஸ்!.

மகாலெட்சுமி : இடைத்தேர்தல்னு ஒரு பண்டிகை எப்பயாச்சும் வருமே... அப்போதான்.

பதில் சொல்லுங்க பாஸ்!



லாவண்யா : எந்தப் பண்டிகைக்கு லீவ் நிறைய விடுறாங்களோ... அந்தப் பண்டிகைக்குதான் உற்சாகமா இருப்பேன்.

முத்துராஜ் : எங்கிட்டு உற்சாகமா இருக்கிறது? பர்ஸ் காலியாகிறதை நினைச்சாலே பதறுமே!

மோகன் : பொங்கல். வேட்டியைக் கட்டிக்கிட்டு, பொங்கலையும் கரும்பையும் தின்னுக்கிட்டுத் ‘தமிழர் திருநாள்’னு கெத்தா சொல்லலாம்!

பதில் சொல்லுங்க பாஸ்!

?ஏ.டி.எம் வரிசையில் கால்கடுக்க நின்றுகொண்டிருக்கும்போது, வங்கியில் இருந்து பெர்சனல் லோன் அழைப்பு வந்தால்?

ப்ரீத்தி விவேக் : ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் வரும் பிரகாஷ்ராஜ் மாதிரி சிரிப்பேன். வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க?

வெங்கடேஷ் : என் ஃப்ரெண்டாதான் இருக்கும் அது. நான் எங்க ஏ.டி.எம்-ல பணம் எடுத்துருவேனோனு குறுக்கப் புகுந்து கலைக்கப் பார்ப்பான்.

திலிப் குமார் : (கவுண்டமணி ஸ்டைலில் படிக்கவும்) இந்த லோன் தரேன்னு சொன்னீங்களே, அதை அக்கவுன்ட்ல போடுவீங்களா? இல்ல பணமா தர்றீங்களா? பணமா தரும்போது சில்லறையா தருவீங்களா? இல்ல நாங்களே மாத்திக்கணுமா?

மது : சோதிக்காதீங்கய்யா!

சஞ்சய் ப்ரியன் : உங்க பூசாரித்தனமும் வேண் டாம், பொங்கச்சோறும் வேண்டாம்.

பதில் சொல்லுங்க பாஸ்!

?பேச்சுலர் வாழ்க்கையின் கஷ்டங்களைச் சொல்லுங்களேன்?

வெங்கடேஷ் :
கஷ்டப்பட்டு புதுசா ஒரு ஜட்டி வாங்கியிருப்போம். நம்ம ரூம்ல இருக்கிறவன் நாம குளிச்சிட்டு வந்து பார்க்கிறதுக்குள்ள நம்ம ஜட்டியைப் போட்டுக்கிட்டு ஆலுமா டோலுமானு ஆடிக்கிட்டு இருப்பான்.

இம்ரான் : தங்குறதுக்கு வீடு கேட்டா, `வயசுக்கு வந்த பொண்ணு எங்க வீட்டுல இருக்கு. அதனால பேச்சுலருக்கு வீடு கிடையாது. ஃபேமிலிமேனுக்குதான்'னு சொல்றாங்க. ஆனா, அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணணும்னா மட்டும் பேச்சுலர் வேணுமாம்.

ஜம்புலிங்கம் : ‘எப்போ கல்யாணம் பண்ணப் போறீங்க?’ இந்தக் கேள்வி கேட்காதவரை பேச்சுலர் வாழ்க்கையில் கஷ்டங்களே கிடையாது. கேட்க ஆரம்பிச்சிட்டாங்கனா கஷ்டத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.

சங்கர்லால் : `பேச்சுலர்தானே... சன்டே உனக்கு என்ன வேலை இருக்கப் போகுது? ஆபீஸ் வா!'ன்னு சொல்றாங்க பாஸ்.

ரவிகுமார் : இருக்கிற அத்தனை கோபமும் துவைக்கும்போதுதான் வெளிப்படுத்துவேன். ஆறு மாசத்துல சட்டையே கிழியுதுனா பாருங்க...

பதில் சொல்லுங்க பாஸ்!

?‘நானெல்லாம் எப்படி இருக்க வேண்டியவன் தெரியுமா?’ என நீங்கள் வெதும்பும் தருணங்கள்?

கௌதம் சாமி : தினமும் தண்ணி பிடிக்கத் தெருமுனைக்குப் போகும்போது!

இம்ரான் : `நானெல்லாம் இன்ஜினீயரிங் படிக்காம இருந்திருந்தா... எப்படி இருந்துருப்பேன் தெரியுமா?'ன்னு அப்பப்போ தோணிக்கிட்டேதான் இருக்கு.

தனசேகர் : ஏ.டி.எம்-ல கால்கடுக்க நிற்கும்போது, முன்னாடிலாம் ரெண்டு பேர் நின்னாலே அடுத்த ஏ.டி.எம்-க்குப் போனது ஞாபகம் வருது.

வால்டர் ராபின்சன் : மேனேஜர்கிட்ட மானாவாரியா திட்டு வாங்கும்போது.

ஜெகன் தேவராஜன் : ரெண்டாயிரம் ரூபாயா மாத்திட்டுத் திரும்ப அதுக்குச் சில்லறை வாங்க அலையும்போது..