உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

குத்துல இருக்கு குறியீடு!

குத்துல இருக்கு குறியீடு!
பிரீமியம் ஸ்டோரி
News
குத்துல இருக்கு குறியீடு!

குத்துல இருக்கு குறியீடு!

காலம் காலமாக அயிட்டம் சாங்கை `ஆ...!'னு உட்கார்ந்து பார்க்கிற நாமெல்லாம் என்னைக்காவது அதில் நாட்டுக்குத் தேவையான நல்ல விஷயங்களை, அதாங்க... தத்துவங்களை எல்லாம் கவனிச்சிருக்கோமா மக்களே? சும்மா ஒரு சாம்பிள்தான் இது!

குத்துல இருக்கு குறியீடு!

நாயகன் : `நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்லை'னு கமல் சொன்னதை மட்டும் இப்போவரைக்கும் சொல்லிக்கிட்டு திரியற `நாயகன்' படத்தில் வரும், `நிலா அது வானத்து மேலே' பாட்டுல `பொண்ணுக்கும் பொன்னுக்கும் அடிதடிதான் மண்ணுக்குப் போகிற உலகத்திலே.... பசிக்குது பசிக்குது தினம்தினம்தான் தின்னா பசி அது தீர்ந்திடுதா'னு சொன்ன பொன்னான தத்துவத்தைக் கவனிச்சா இருப்பீங்க?

குத்துல இருக்கு குறியீடு!

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் : இந்தப் படத்தில் `சிரிச்சு சிரிச்சி வந்தா' பாட்டுக்கு ஆடின ரகசியாவை ஞாபகம் வெச்சிருப்பீங்கனு தெரியும். ஆனா, `ஓடும் தண்ணியில பாசி இல்லையே... உணர்ச்சியை கொட்டிப்புட்டா நோயும் இல்லையே...',  `உலகம் இன்பத்துக்கு ஏங்கிக்கிடக்கு... ஒழுக்கம் ஊருக்கு ஊர் மாறிக்கிடக்கு. தப்புகள் இல்லையென்றால் தத்துவம் இல்லையடா தத்துவம் பிறக்கட்டுமே தப்பு பண்ணேன்டா'னு சொன்ன அவ்வளவு பெரிய அரசியல் தத்துவத்தைலாம் ஞாபகத்துல வெச்சிருப்பீங்களாங்கிறது தான் இரண்டாயிரம் ரூபாய் கேள்வி.

குத்துல இருக்கு குறியீடு!

பாணா காத்தாடி : அதர்வா முதன்முதலாக சினிமாவுக்குள் காத்தாடிவிட்ட இந்தப் படத்தோட அயிட்டம் சாங்கில் ஒரு பாட்டு இருக்கு ஜி. `உள்ளாரப் பூந்து பாரு' பாட்டுக்கு நடுவுல `ஆம்பளைக்கு பொண்ணு அது ஆண்டவன் சட்டம்... ஆளைத் தினம் மாத்து அது அவனவன் இஷ்டம்!'ங்கிற தடாலடி தத்துவத்தைச் சொல்லிட்டு அப்படியே அடுத்த சரணத்துல `ஏழு ஜென்மம் கேட்டு நீ ஏன் பொறக்கணும்... இருக்கிறதை முழுசா நீ அனுபவிக்கணும்!’னு கேட்டு வாங்கிப்போட்டு குத்தி இருக்காங்களே... இதையெல்லாம் நீங்க பார்க்கணும். கண்டிப்பாப் பார்க்கணும்!

- ஜெ.வி.பிரவீன்குமார்