உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

வணங்காமுடி பாய்ஸ்!

வணங்காமுடி பாய்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
வணங்காமுடி பாய்ஸ்!

வணங்காமுடி பாய்ஸ்!

விடிய விடிய சாட் பண்ணிட்டு, சும்மா ஒரு நாலு மணிநேரம் மட்டும் தூங்கிட்டு, ஏழெட்டு வாட்டி அலாரம் அடிச்சு எட்டாவது வாட்டி எழுந்து,  பாதி திறந்தும் பாதி மூடியும் இருக்குற கண்ணோட `டிஸ்க்கான் டிஸ்க்கான்'னு  பல்லைத் தேய்ச்சி, காக்கா குளியல் மாதிரி ஒரு குளியலைப் போட்டு,  அப்புறம் நைட்டே அயர்ன் பண்ணிய டிரெஸ்ஸை எடுத்து மாட்டி கண்ணாடி முன்னாடி போய் நிப்பான் நம்ம பையன். அப்போ அவன் முகத்தைப் பார்க்கணுமே... பயங்கரம்!

வணங்காமுடி பாய்ஸ்!

வடிவேலு `போக்கிரி' படத்துல, அவர் முகத்த கண்ணாடில பார்த்துட்டே சொல்லுவாருல `இந்த மங்கி பொம்மை என்ன விலை?'னு! அதே மாதிரி தாங்க நம்ம பசங்க ரியாக்‌ஷனும்   இருக்கும். ஏன்னா நைட் பூரா கால்குலஸ் படிச்சதுல 90  டிகிரியில முடி நட்டுக்கிட்டு இருக்கும். இந்த முடியை 30 டிகிரிக்கு கொண்டு வர நம்ம பசங்க படுற பாடு சொல்லி மாளாது. வீட்டுல இருக்குற எல்லா வகையான சீப்பையும் எடுத்து நல்லா வறட்டு வரட்டுனு தலையை சீவுவான். இதுல பெண்கள் யூஸ் பண்ணுற பேன் சீப்புக் கூட விதிவிலக்கல்ல மக்கா!

எவ்வளவுதான் முடியைப் படிய வெச்சிருந்தாலும் முடி அடங்குன பாடா இருக்காது. தேங்காய்  எண்ணெயப் பிடிச்சும், பிடிக்காமையும் கையில எடுத்து அதுல 1 மி.லி தண்ணிய சேர்த்து தலையில தடவி சீப்பு எடுத்து சீவி பார்க்கும் போது இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கும் நம்ம பசங்க ஃபேஸ். ஏன்னா, படிஞ்சி சீவிய முடியைக் கொத்தாப் பார்த்தா பனங்கொட்டை மாதிரி இருக்கும். இதுல சோடாப்புட்டி போட்டா அம்மாஞ்சி மாதிரியே ஒரு டெரர் லுக் வந்திரும். அவன் போட்டுருக்குற டிரெஸ்க்கும், அவன் ஹேர்ஸ்டைலுக்கும் சம்பந்தமே இருக்காது. இருந்தாலும் பரவாயில்லைனு முடியை வித்தியாசமா மாத்தி சீவுவான். அப்புறம் முடியைத் தான் சீவியாச்சேனு நெனச்சி, கண்ணாடியில முகத்தைப் பார்க்கும் போது... விடாது கருப்பு மாதிரி ஒரு முடி மட்டும்  நட்டுக்கிட்டு நட்டக்குத்துல நிக்கும்! அந்த ஒற்றை முடியை சீப்பு வெச்சு சீவிப்பார்ப்பான், கையை வச்சி அமுக்கிப் பார்ப்பான், படிக்காம பத்திரமா வெச்சிருக்குற செமஸ்டர் புக்குல இருந்து டிக்ஸ்னரி வரைக்கும் அந்த முடியில வெச்சி நல்லா அமுக்கோ அமுக்குனு அமுக்குவான். கடைசி வரைக்கும் அந்த அடங்காத முடி, அரைபாடி வண்டியில வடிவேலு கணக்கா அசையாம அப்படியே நிக்கும்.

வணங்காமுடி பாய்ஸ்!

 போனா போகுதுனு அந்த முடியோட காலேஜ் பஸ்ல ஜன்னல் பக்கம் உட்கார்ந்து காலேஜுக்குப் போவான். அங்கே இருக்குற ஒரு பொண்ணுகூட நம்ம பையனைப் பார்த்து, ‘ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே!'னு சொல்லாது. எப்படிய்யா சொல்லும்? அதான் நட்டுவாக்காலி மாதிரி நட்டுக்கிட்டு நிக்குதே முடி. அட, இதுகூட பரவாயில்லை. ஆனா, நம்ம பையனைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சிட்டு போவாங்க நம்ம காலேஜ் பொண்ணுங்க. நல்லா படிஞ்சி சீவுன முடிலாம் ஒரு தீவு மாதிரி  தனித் தனியா நீண்டு நிற்கும். இது தெரியாத நம்ம பையன் கிளாஸ்க்குள்ள போகும் போது, `டேய்... முடிய வெட்டிட்டு கிளாஸ்க்குள்ள வா... இல்லைன்னா தலைக்கு எண்ணைய வெச்சிட்டு வா..! அதுவும் இல்லைனா முடியை சீவிட்டு வா. கண்ணாடிய பார்ப்பீங்களா, மாட்டிங்களாடா?'னு தலையில முடியே இல்லாத வழுக்கை லெக்சரர் கேட்பார். மொத்த கிளாஸும் சிரிக்கும். சத்திய சோதனை!

அப்போதான் நம்ம பையன் என்னாச்சி, ஏதாச்சினு செல்போன் எடுத்து முகத்தைப் பார்ப்பான். `ஐயோ...பேயி!'னு அவனையே அவன் பார்த்து பயந்துக்குவான்.

பாவம்ல நம்ம பசங்கள்லாம்? `தம்மாத்துண்டு முடினால நம்ம பசங்களுக்கு இவ்ளோ ப்ராப்ளமா?'னு கேக்குறீங்களா? அதுல மலையவே கட்டி இழுக்கலாம்னு எஸ்.டி.டி சொல்லுது பாஸ்!

 - ஹ.ச.ஷஃபியுல்லா