உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

எட்டு எட்டா பிரிச்சுக்க..!

எட்டு எட்டா பிரிச்சுக்க..!
பிரீமியம் ஸ்டோரி
News
எட்டு எட்டா பிரிச்சுக்க..!

எட்டு எட்டா பிரிச்சுக்க..!

ஃப்ரெண்ட்ஸ் இல்லாத லைஃப் தண்ணி இல்லாத பைப் மாதிரி. அப்படிப்பட்ட ஃப்ரெண்ட்ஸ், எட்டு டைப்ல இருக்காங்கனு என் ஏழாவது அறிவு சொல்லுது. கமான் டியூட்ஸ்!

 குளோஸ் ஃப்ரெண்ட்:  நம்மளைப் பத்தி `அ முதல் ஃ' வரை எல்லாம் தெரிஞ்சு நம்மளைக் குளோஸ் பண்றவங்க இந்த வகைதான். `பிடிக்கலைனா போடா'னு சொல்லாம, `இவன் கூடத்தான் சுத்துவேன்'னு எப்போவும் நம்மகூடவே இருப்பாங்க. நம்மளை விட்டுக்கொடுக்காத, குறை சொல்லாத இவர்களை, ஜெயலலிதாவுக்கு ஒரு சசிகலா மாதிரி கலைஞருக்கு ஒரு அன்பழகன் மாதிரி ஒப்பிடலாம். எங்கே போனாலும் வருவாங்க, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க! 

எட்டு எட்டா பிரிச்சுக்க..!

கிறுக்குத்தனமான ஃப்ரெண்ட்:  நாம நம்மளைச் சுத்தி ஒரு சர்க்கிள் வரைஞ்சு வெச்சிருப்போம். அதிலேதான் நாமளும் நிற்போம். இதுல இருந்து நம்மளை வெளியே கொண்டு வர்றவங்கதான் இந்த டைப் ஃப்ரெண்ட்ஸ். புதுசு புதுசா எதையாவது இவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டே இருக்கலாம். எப்பவும் ஃப்ரெஷ்ஸா இருக்கலாம்!

 பட்டு டப்பு ஃப்ரெண்ட்:  முதல்ல இந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் கிடைக்க எட்டு ஜென்மத்துக்கு முன்னாடி தவம் பண்ணி இருக்கணும். (மொத்தம் ஏழுதானே!) அட விடுங்க டியூட்... நாம பண்றது நல்லதுக்கு இல்லைனு தெரிஞ்சா, உடனே குத்தம் கண்டுபிடிச்சு தேங்காய் உடைக்கிறது இவங்கதான். `நம்மளைத் தப்பா நினைச்சுடுவானோ'னு சுட்டிக்காட்டாம இருக்கிற மத்தவங்களுக்கு மத்தியில், இதுமாதிரி நண்பர்கள் என்னைக்குமே கெத்துதான்!

 அட்வைஸ் அலர்ட் ஃப்ரெண்ட்:  
`வாழ்க்கைங்கிறது வாழைப்பழம் மாதிரி ச்சீ... வாலிபால் மாதிரி... இல்ல இல்ல... வாழைப்பழம் மாதிரிதான்'னு இவங்க போடுற அட்வைஸ் மொக்கையைக் கேட்க நாலு காது வேணும்! ஆனா, அப்செட் ஆகி இருக்கிற நேரத்துல இதுதான் நம்மளைத் தூக்கி நிறுத்தும். அட்லீஸ்ட் உட்காரவாவது வைக்கும். கைடு பண்றதுல இவனுங்க பெரிய கை! 

 ஆல் இஸ் வெல் ஃப்ரெண்ட்! 
வீடு, சொந்தபந்தம்னு நம்மளைச் சுத்தி இருக்கிறது மட்டும்தான், கலாசாரம்னு நினைக்காம இருக்க, இந்தமாதிரி நண்பர்கள் நிச்சயம் கை கொடுப்பாங்க. ஃபிரெண்டுனு சும்மா சொல்லிக்கிட்டு இருந்தாப் போதுமான்னு, வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப்போய் பிரியாணி செஞ்சு கொடுக்குறதுல இவங்க அஜித்துக்கும் மேல!

 டோழி :  இது ஓரே குட்டைகளைக் கடந்து குதித்த ஃப்ரெண்ட்ஸ்ஷிப். நம்மளோட ஹேர் ஸ்டைல்ல இருந்து, நம்ம நடக்குற விதம், பேசுற விதம், பழகுற விதம்னு விதவிதமா நம்மளை மாத்தி வித்தை காட்டுறது இவங்கதான். நமக்குச் சின்னதா பிரச்னை வந்தாக்கூட இவங்க பெருசா எடுத்துப்பாங்க. லவ்வர், அண்ணன், தங்கச்சி... அதையும் தாண்டிய தனிக்கட்சி இது!

 பக்கத்து வீட்டு ஃப்ரெண்ட்: 
அண்ணன் தம்பி மாதிரி உரிமை எடுத்துக்கிறதுல இவங்களை அடிச்சுக்க முடியாது. சாயங்காலம் ஆச்சுன்னா, ராத்திரி வரை பொழுது இவங்களோடதான். என்ன ஒண்ணு... வீட்டுல செஞ்ச குலோப்ஜாமூனை நிம்மதியா சாப்பிட முடியாது. பங்குக்கு வந்தே தீருவாங்க, இந்த `பங்கு'கள்!

 பேஷன் ஃப்ரெண்ட் :  
ஊர்ல இருக்கிற அத்தனை அப்டேட்டும் பாக்கெட் மொபைல்ல வெச்சுச் சுத்திக்கிட்டு இருக்கிற ரியல் டியூட் இவங்கதான். என்ன ஒண்ணு, நமக்குத் தெரியாதுனு இவனுங்க கொடுக்குற டார்ச்சரைக் கொஞ்சம் தாங்கிக்கணும். மத்தபடி, நம்ம மூளை மக்கிப்போகாம, மங்களகரமா இருக்கிறதுக்கு இவங்க வேணும் பாஸ்!

இந்த எட்டு ஃப்ரெண்ட்ஸைப் ஃபாலோ பண்ணுங்க எங்கேயோ போகலாம். (என்ன... வேணாமா?) சரி, அடுத்த பக்கத்துக்காவது போங்க!

- க.மணிவண்ணன்