உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

டக்குனு 5 பிட்டு!

டக்குனு 5 பிட்டு!
பிரீமியம் ஸ்டோரி
News
டக்குனு 5 பிட்டு!

டக்குனு 5 பிட்டு!

டக்குனு 5 பிட்டு!

க்ஸாம்ல பாஸ் ஆகறதுக்கு எத்தனையோ வழி இருந்தும்... `பிட்டுதான் என் ஒரே வழி'னு ஏக பத்தினி விரதம் இருக்கும் டெரர் டெடிகேஷன் கய்ஸா நீங்க? பிட்டு வெச்சுக்கிட்டு நீங்க அனுபவிக்கிற சுக, துக்கத்தை விளக்கத்தான் இந்த ஸ்பெஷல் `டக்கு' மேட்டர்...

டக்கு 1 :
பிட்டு எழுதறது எவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா? சிலபஸை ரெஃபர் பண்ணி, ப்ளூ ப்ரிண்ட்டைப் புரட்டி, பழைய கொஸ்டீன் பேப்பர்ஸ் எல்லாம் பொறுக்கியெடுத்து, அன்னப்பறவை பாலைப் பிரிக்கிற மாதிரி பிரிச்செடுத்து, பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்கள்ல முக்கிய கேள்விகள் எதுனு ஃப்ரெண்டுக்கு வாட்ஸ்அப் பண்ணி, அதுக்கு அவ ரிப்ளை பண்ற வரைக்கும் வெய்ட் பண்ணி... உஸ்ஸ்! எத்தனை பண்ணிப் பார்க்க வேண்டி இருக்கு!? #அதுக்கு படிக்கிறதே பெட்டர் பாஸ்!

டக்கு 2 : மேலே சொன்னதையெல்லாம் முடிச்சதுக்கப்புறம் முக்கியமான அடுத்த டாஸ்க் பிட்டு எழுதுறதுதான். இதுக்குனே தரமான ஒரு ஏ4 ஷீட் ரெடி பண்ணி, ஏதோ காம்படீஷன்ல கலந்துக்கிற மாதிரி, பொறுமையா, நிதானமா, தெளிவா...முக்கியமா சின்னதா எழுதணும். ஏன்னா, எக்ஸாம் ஹால் போய்ப் புரியணும்ல! இப்படி நாம நிதானமா எழுதுற லட்சணத்துல சில பதில்கள் நம் பர்மிஷன் இல்லாமலே மண்டையில ஏறும். அதனால கூட நாம நாஸா போற அளவுக்கு விஞ்ஞானியா ஆகும் வாய்ப்புகள் உண்டு. எனக்குத் தெரிஞ்சு விடிய விடிய பிட்டெழுதி அசதியில் மயங்கி மறுநாள் கவனக்குறைவா பிட்டடிச்சு மாட்டி ஃபெயிலானோர் எண்ணிக்கை அதிகம்!  #ஸ்டெடியா இருடா சூனா பானா!

டக்கு 3 : `படிச்சிரலாமே'னு இடைஞ்சல் தரும் மனசாட்சியை ஒரே தாவுல தாண்டிவந்து, அடுத்த டக்கு என்னன்னு பார்த்தோம்னா... பெரிய ட்விஸ்ட்டே இருக்கு! பிட்டு எழுதுறது பெரிசுல்ல மக்கா. `எந்தப் பிட்டு, எங்கே வைக்கிறோம்'ங்கிற இடம் பொருள் ஏவல் பில்லி சூனியம் ரொம்ப முக்கியம். வசதியா ஈஸியா மறைவான இடத்துல வைக்கிறது மட்டுமில்லாம, எந்தக் கேள்விக்கான பிட்டை எங்கே வெச்சிருக்கோம்ங்கிறதை மறக்காம வெச்சிருக்கணும். தேர்வு அறையில பதில் தெரியாம முழிக்கிறதைவிட, கொண்டுபோன பிட்டை எங்கே வெச்சோம்னு தெரியாம முழிக்கிறது எவ்ளோ பெரிய கேவலம் தெரியுமா? #பெரிய அக்கப்போரால்ல இருக்கு!

டக்கு 4 :
அடுத்த டக்கு நம்ம மூஞ்சியைப் பார்த்து சந்தேகத்துல நம்மையே சுத்திச் சுத்தி வர்ற வாத்தியார்கிட்ட இருந்து எஸ்கேப் ஆகிறது. அவர் கவனிக்காத நேரமாப் பார்த்து கொண்டுபோன பிட்டை எடுத்து அழகா டேபிள் மேல வெச்சு மறைச்சு எழுதணும். வாத்தியார் பக்கத்துல வந்ததுகூடத் தெரியாம, குனிஞ்சமேனிக்கு நாம பாட்டுக்கு, கீழே வெச்சு எழுதிக்கிட்டு இருந்தா, நம்ம பெர்ஃபார்மென்ஸைப் பார்த்து அலேக்கா அள்ளிருவாங்க. #பீ கேர்ஃபுல். நான் என்னைச் சொன்னேன்!

டக்கு 5 : மேலே சொன்ன அத்தனை டக்கையும் சக்சஸ்ஸா பண்ணி முடிச்சதுக்கப்புறம் முகத்துல வரும் பாருங்க ஒரு திருப்தி. ஏதோ முதல் ஆளா நம்ம கைக்குதான் 2,000 ரூபாய் நோட்டு வந்த மாதிரி!

 `இந்தப் பொழப்புக்கு...'னு உங்க மைண்ட் வாய்ஸ வெளியே ஹெவியா கேட்ச் பண்ணிட்டேன். அதனால ஒழுங்காப் படிச்சு பாஸ் ஆகுங்க மக்கா!

- ச. ஆனந்தப்பிரியா