உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

உங்க கனவுல உப்பு இருக்கா?

உங்க கனவுல உப்பு இருக்கா?
பிரீமியம் ஸ்டோரி
News
உங்க கனவுல உப்பு இருக்கா?

உங்க கனவுல உப்பு இருக்கா?

உங்க கனவுல உப்பு இருக்கா?

ட்பூஸ்ல சிலபேரைப் பார்த்தீங்கனா, `எனக்குத் தூக்கமே வராதுப்பா. கேட்டா இங்கிலீஷ் டாக்டர்  இன்ஸோம்னியாங்குறார். நாட்டு வைத்தியர்  நல்லெண்ணெய்க் குளியல் போட்டுட்டு படுங்குறார்'ங்கிற புலம்பல்ஸோடவே எந்நேரமும் கண்ணு  கங்கு ஆகி, கேப்டன் மாதிரியே திரிவாய்ங்க.. ஆனா `இப்படி இது நடந்துச்சு, அப்படி அது வந்துச்சு'னு ஒரு நாளைக்கு ஒன்பது கனவுகளைப் பத்திச் சொல்லிப் பார்க்கிறவங்க, கிட்ட எல்லாம் அர்த்தம் கேட்டுக்கிட்டிருப்பாய்ங்க.. அப்படின்னா இவிய்ங்க கண்ணைமூடி லைட்டா அசந்த சைக்கிள் கேப்புல கமுக்கமா கனவுப்பயபுள்ள வந்து பிட்ட ஓட்டியிருக்குனுதானே அர்த்தம். பாம்பு பல்லி சைத்தான் சட்டைப்பொத்தான்னு நாம ஆதிவாசிங்களா இருந்தப்ப கண்ட கனவுகளோட பலன்களை மட்டுமே இன்னைக்கு வரைக்கும் ரிப்பீட் பண்ணிக்கிட்டிருக்காங்க கனவுசாஸ்திரக் கலை க்ளிஷே மாமாக்கள். கபாப், சிக்காங்கொக்கா-னு புதுசு புதுசான அயிட்டங்களெல்லாம் கனவுல வந்தா நான் எங்கேனு போய் சொல்லி என்னன்னு கண்டுபிடிப்பேன்னு வாயில துண்டை வெச்சு வயிறு குலுங்கக் குமுறி இனி அழ வேணாம் சின்னப்பய மக்களே.. உங்களுக்காகவே சிலபல கடுமையான ஆய்வுகளை நிகழ்த்தி இந்த இந்தக் கனவுகளுக்கு இதான் மேட்டர்னு பலன்பட்டியலைக் கொண்டாந்திருக்கோம் `சர்'னு மைண்ட்ல ஏத்திக்கிட்டு கனவுக்கும் பலனுக்கும் சோடி போட்டுப் பாருங்கப்பு சோடி...

குக்கர் விசில் : `எவ்வளவு வேலை கொடுத்தாலும் சிந்தாம சிணுங்காம செஞ்சு முடிக்கிற அவருகிட்டவே இந்த டார்க்கெட்டையும்  கொடுத்திடலாம்'னு யாரோ குருவித்தலை பனங்கா ப்ளான் போடுறாங்க உஷார்... ப்ரஷர் தாங்காம `தஸ்புஸ்'னு மூக்கால புழுதிப்புயல் பறக்கவிட வேண்டிய நிலை வரலாம்.

பறக்கும் தட்டு :  கத்திரிக்காய் கொத்ஸுடன் சுத்தி சீரியல் லைட்டோட பிரியாணி ஹாஃப் ப்ளேட் பறந்து வந்தா தெரிந்த பாய் வீட்டில் ஏதோ விசேஷம் நடக்கப்போகிறது எனக் கொள்க. அதே தாம்பூலத்தட்டு தலைகீழா வந்தா பஸ் ஓரமா போவதைத் தவிர்க்கவும். இல்லயில்ல அப்படித்தான் நான் போவேன்னா, தங்களைப் போக விட்டு புறமண்டையில் வெத்தலைபாக்கைத் துப்ப ஒரு குழு காத்துக்கிட்டு இருக்கு ஆமா.

ஏரியா தாதா : வெறி புடிச்ச மாதிரி நொடிக்கு  ஒருமுறை கவிதைங்கிற பேர்ல ஒண்ணை எழுதி ஃபேஸ்புக்குல போட்டு ஏரியாவே உங்களைப் பார்த்து நடுநடுங்கச் செய்யப்போறீங்க. சீக்கிரமே கவிதைகுண்டர் தடுப்புச்சட்டம் தங்கள் மீது பாயலாம். உள்ள போயிட்டு வந்த பிறகு வெறி எகிறி மைக்ரோ வினாடிக்கு இருமுறைனு கவிதை போடுறதால டோட்டல் சிட்டியே அச்சத்துல உறையலாம். தப்பித்தவறி நீங்க கவிதை  எழுதிடக்கூடாதுங்கிறதுக்காகவே ஏரியா தாதாக்கள் மாமூல் காணிக்கையை தேடிவந்து காலடியில சமர்ப்பிக்கலாம்.

உங்க கனவுல உப்பு இருக்கா?

நாய்பிடிக்கும் வண்டி : இன்னும் சில நாட்களுக்கு பார்க்கிங் என்ற வார்த்தையைக்கூட லாங்டெர்ம் மெமரி லாஸ் டப்பாவுக்குள் போட்டு மூடிவிடவும்.சிக்னலில் நின்னாகூட கொக்கியோ,  லாடமோ போட்டு கொத்தா உங்களோடவே தூக்கிட ஆவலா காத்திருக்கு போக்குவரத்துக் காவல் துறை.  ஜாக்கிரதை!

குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் : வாரம் முழுக்க மிஞ்சிய பழைய சோற்றை பிசைஞ்சு வடகம் பிழிய வைக்கப்படுவீர்கள்.வீக் எண்ட் இனிப்பதற்கு வாய்ப்பில்லாது போகலாம். தந்தூரி அண்டாவாக கொதிக்கும் மொட்டமாடியில  காக்கா குருவி அண்டாம கண்போல வடகத்தைக் காக்க கையில் ஒரு குச்சி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

ஸ்டிக்கர் பாய்ஸ் : சனிக்கிழமை சரக்கடிக்கும்போது கவனம் தேவை. புது பனியன் ஸ்டிக்கரை பீரோவில் ஒட்டும் பழக்கமுடைய நண்பன் நடுமுதுகில் நைஸாக, குத்திவிட்டு துரோகமிழைக்கலாம். அரை டஜன் கொய்யாக்காமிட்டாயை வாயில் போட்டு குதப்பிக்கொண்டே  வீடு வந்து சேர்ந்து ஸ்டெடியாக இருப்பதாக சீன் காண்பித்தாலும், சீல் ஸ்டிக்கர் காட்டிக்கொடுத்துவிட பாத்ரூம் ப்ரூம்ஸ்டிக் பஞ்சு பஞ்சாகப் பிய்ய நேரிடும்.

- யூஜின்