
கோவா போலாமா?

இந்த செமஸ்டர் முடிஞ்சி லீவு வந்தாலே வர்ற ஒரே ஒரு டெம்ப்ளேட் வசனம்... `கோவா போலாம் டியூட்!'
`தெரியாமத்தான் கேட்கிறேன்... நீ அப்படி என்னத்த இந்த செமஸ்டர்ல எழுதிக் கிழிச்சிட்டேனு கோவா போறே?'-இது என் மைண்ட் வாய்ஸ்தான் மக்களே! பொதுவா `கோவா திட்டம்' எப்படி தீட்டப்படுகிறது? எங்கிட்டயே மைக்கைக் கொடுங்க...
பொதுவா இந்தக் கொடிய திட்டம் நடைபெறுவது கல்லூரி விடுமுறை நாட்களில்தான். ரெஸ்ட் எடுத்து டயர்ட் ஆகும்போது வரும் டரியல் கனவு தான் கோவா..!
கோவா என்றவுடன் வரும் முதல் ஐடியாதான் வாட்ஸ் அப் குரூப். `கோவா ஈஸ் ஆன்'னு அவனுக்கு கிளாஸ்ல தெரிஞ்ச பதினோரு பேரைச் சேர்த்துடுவான். பொண்ணுங்களுக்கு மட்டும் தடா!
ஒருவன் முதல் குண்டைத் தூக்கி வீசுவான். `டேய் அன்னைக்கு எங்க அக்காவுக்குக் கல்யாணம்டா!'னு. அடப்பாவி அக்கா கல்யாணத்தை மறைச்சதைக்கூட ஒத்துப்பேன். ஆனா அக்காவையே மறைச்சிட்டியேடா!
சரி விட்டுத் தொலைஞ்சா அடுத்த மெஸேஜ்... `மச்சி அன்னைக்கு என் ஆளுக்கு ஃப்ர்த்டே டா!'
சரி இதையும் விட்டுத் தொலைஞ்சா வருவான் ஒருத்தன். `டேய் எனக்கு அரியர் இருக்குடா'னு! `டேய் அது எனக்கும்தான் இருக்கு. பாஸ் பண்ணி என்ன பண்ணப்போறோம் சொல்லு. சேர்த்து வெச்சி UPSC எக்ஸாம் எழுது. IPS ஆகிக்கலாம்!'னு தேத்துனா நம்மளுக்கே அப்போதான் தெரியும் நமக்கு ஏழெட்டு சப்ஜெக்ட்ல அரியர் இருக்குனு. கோவாவுக்குப் போகலாமா? படிக்கலாமா?

இப்படியே ஒவ்வொருத்தனா குரூப்பை விட்டு `லெஃப்ட்' ஆவானுங்க. அவனைக்கூட நம்பலாம். ஆனா குரூப்பை மியூட் பண்ணிட்டு `Game Of Thrones' எனப்படும் வாணி ராணி பாக்குறான் பாருங்க... அவனை நினைச்சாலே ஜியோ... ஸாரி, ஐயோ!
கடைசியா குரூப்ல கார்த்தினு ஒரு மகாபிரபு மட்டும் இருப்பான். அதை நம்பி, `நானும் கார்த்தியும் கோவா போறோம்'னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுவோம். சரி போனோமா? இல்லையா?
கோவா போகாமத்தான் இந்தக் கட்டுரையை எழுதிட்டு இருக்கேன்.
- க.மணிவண்ணன்