உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

வீட்டுக்கு வீடு இதானே!

வீட்டுக்கு வீடு இதானே!
பிரீமியம் ஸ்டோரி
News
வீட்டுக்கு வீடு இதானே!

வீட்டுக்கு வீடு இதானே!

வீட்டுக்கு வீடு இதானே!

வீட்டுக்கு வீடு ஃபேன், டியூப்லைட் இருக்கிற மாதிரி நாம் அதிகம் கண்டுகொள்ளாத‌ வேறு சில பொருட்களும் எல்லோர் வீட்டுலயும் இருக்கு. அது என்னென்ன பொருட்கள்னு சொல்றேன் மக்கா. இந்த லிஸ்ட்டில் பாதிப் பொருட்கள் உங்கள் வீட்டுலயும் இருந்தால், நீங்களும் நார்மல் மனுஷன் ஃப்ரம் இந்தியாதான்!

• எல்லோர் வீட்டு சமையற்கட்டிலும் பெரிய சைஸ் கேரிபேக் ஒண்ணு இருக்கும், அந்த கேரி பேக் உள்ளே ஆயிரம் கேரி பேக்குகளை சேர்த்து வெச்சிருப்பாங்க நம்ம அம்மா.

• அப்புறம் ஒரு சேர் இருக்கும். அந்த சேர்ல துவைச்ச துணி, துவைக்காத துணி எல்லாத்தையும் குவிச்சு வெச்சு அது மேல குத்த வெச்சு அமர்வதுதான் நம்ம பொழுதுபோக்கு.

வீட்டுக்கு வீடு இதானே!

• வீட்டு செல்ஃபில் ஒரு ஸ்வீட் டப்பா, மூடி இல்லாமல் இருக்கும். அதுக்குள்ளேதான் ஹேர்பின், ஹூக், ஷார்ப்னர் போன்ற பயங்கர ஆயுதங்களைப் போட்டு வெச்சுருப்போம். ரைட்டா?

• கார்டு போர்ட் அட்டை பாக்ஸ் ஒண்ணு பரண் மேல இருக்கும். அது வீடு காலி பண்ணும்போது `சாமான் நிக்காலோ'வுக்கு உபயோகப்படும்னு முன்னெச்சரிக்கையா பத்திரப்படுத்தி வெச்சிருக்கிறது தொட்டுத் தொடரும் அட்டைப் பாரம்பரியம்!

• அதேபோல் பழைய சின்ன பின் சார்ஜர், ஒரு பக்கம் அவுட்டான ஹெட்போன், சாம்பார்ல விழுந்த செல்போன், ரசத்துல விழுந்த மெமரி கார்டு போன்ற பொருட்கள் அடங்கிய கவரோ, செல்போன் டப்பாவோ ஒண்ணு  கண்டிப்பா இருந்தே ஆகணுமே...!

வீட்டுக்கு வீடு இதானே!

• பச்சை கலர் பிளாஸ்டிக் ஃபைல் ஒண்ணு இருக்கும், அதுக்குள்ளேதான் நாம வீட்டுக்கு வாங்கின எல்லா எலெக்ட்ரிக் சாமான்களோட பில்லும், மேனுவல் புக்கும் இருக்கும். ஏங்க நான் சரியாத்தானே பேசிட்டு இருக்கேன்.

• அப்புறம் எல்லா வீட்டுப் பரணிலும் ஓடாத டி.வி.டி.கள் அல்லது பப்ளிக்கா ஓடவிட முடியாத டி.வி.டி.கள்  ஒண்ணாவது இருக்கும். பேட் ஃபெல்லோஸ்..!

- ப.சூரியராஜ்