உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

ஓடுங்க... கிருமிகள் தாக்க வருது!

ஓடுங்க... கிருமிகள் தாக்க வருது!
பிரீமியம் ஸ்டோரி
News
ஓடுங்க... கிருமிகள் தாக்க வருது!

ஓடுங்க... கிருமிகள் தாக்க வருது!

`என் ஃப்ரெண்டைப் போல யாரு மச்சான்' எனத் தோள்மேல் கைபோட்டு ஃபீல் செய்வதெல்லாம் இருக்கட்டும், ஃப்ரெண்டாகவே இருந்தாலும் சில விஷக்கிருமிகளை எல்லாம் ஆட்டத்துல சேர்த்துக்கவே கூடாது. அவங்கதான் இவங்க!

ஓடுங்க... கிருமிகள் தாக்க வருது!

•  சிவனே என இ.எம்.ஐ-யில் வாங்கிய வண்டியில் ஊர்சுற்றிக் கொண்டிருப்போம். `அட உன் ரேஞ்சுக்கு நீ இன்னுமா கார் வாங்கலை' என ஆரம்பிப்பார்கள் இந்த பாய்சன் பூச்சிகள். முதலில் அதெல்லாம் நமக்கு சரிப்படாது என ஒதுங்கிப்போனாலும், `உன் ரேஞ்சுக்கு எல்லாம் நீ திமிங்கலப் பால்லதான் டீ குடிக்கணும்' போன்ற அவர்களின் பிட்டுகளில் மயங்கி காரும் வாங்கிவிடுவோம். அப்புறமென்ன, கார் காத்து வாங்க நிற்கும். சும்மா நிற்கும் காருக்கு நடந்துபோய் இ.எம்.ஐ கட்டிவிட்டு வருவீர்கள்.

• ஒவ்வொரு குரூப்பிலும் எவ்வளவு சட்டி சோறு சாப்பிட்டாலும் வெயிட் போடாத ஒருவன் இருப்பான். அவன் அளவிற்கு நாம் தின்றால் போதும், மூக்கு, முதுகு எல்லாம் வியர்த்துவிடும். `பாத்து மச்சி. இந்த வெயிட்டை வெச்சுக்கிட்டு இப்படி சாப்பிட்டா இதயம் சட்டுனு நின்னுடுமாம்' என்ற அவனின் பிட்டில் நமக்கு பக்கென அடிவயிறு கவ்வும். அப்புறமென்ன, வாழையிலையை வெறிக்க வெறிக்கப் பார்த்துவிட்டு கிளம்ப வேண்டியதுதான்.

 

• வாரம்தோறும் சனிக்கிழமை களில் ஆஜராகும் சைத்தான் இது. `ஹைய்யா நாளைக்கு லீவு, நிம்மதியா தூங்கலாம்' என்ற எண்ணத்தில் சட்டி நிறைய சிமென்ட் அள்ளிப்போட்டு அடக்கம் செய்வார்கள். `என்ன மச்சி, வீக் எண்டுல பார்ட்டி இல்லாமயா' எனத் திருவாய் மலர்வார்கள். இஷ்டமே இல்லாவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாய்ப் பார்ட்டி மைண்ட்செட்டுக்குத் தயாராகவும், `உன் ட்ரீட்தான் மச்சி' என அடுத்த குண்டை எறிவார்கள். பர்ஸ் பாவம் பிதுங்கப் பிதுங்க முழிக்கும்.

 

• நாம் ஆபீஸுக்கு லேட்டாகப் போய் சீக்கிரமே திரும்பும் அசால்ட் சேதுவாக இருந்தால் இவர்களுக்குப் பொறுக்கவே பொறுக்காது. `என்ன மச்சி கொஞ்சம்கூட பொறுப்பில்லாம இருக்கே? கல்யாண வயசு ஆகுதுடா உனக்கு. மெச்சூர்டா இரு' என பிளாக் போர்டு மாட்டி கிளாஸ் எடுப்பார்கள். `சரி, ஃப்ரெண்ட் திட்டுறானே' என நாம் நாக்குத்தள்ள வேலை பார்த்துவிட்டு வந்தால், `எப்போ பாரு வேலை வேலைன்னே இருக்காதடா' என்பார்கள். நான் சும்மாத்தானய்யா இருந்தேன்.

• ஒரு சின்ன இடைவெளிக்குப் பின்னால் இவர்களை மீட் செய்தால் அவ்வளவுதான். `என்ன மச்சி இவ்ளோ தொப்பை போட்டுட்ட? ரொம்பத் தொப்பை போட்டா முடி கொட்டுமாம். அப்புறம் பொண்ணுக்கு எங்கே போறது' எனப் பற்ற வைப்பார்கள். தொப்பைக்கும் முடிக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய மூளை, `இதை எப்படிக் கரைக்கலாம்' எனக் குறுக்கு வழியில் ரூம் போட்டு யோசிக்கும். அப்புறமென்ன, மார்கழிப் பனியில் மாங்கு மாங்கென ஓடி நாய்களின் இல்லறத்தைக் கெடுத்துக்கொண்டிருப்போம்.

 

• இதுதான் இருப்பதிலேயே பெரிய பாவம். ஜாலியாய் சுற்றிக் கொண்டிருப்பவர்களைப் பிடித்து, `என்ன நீ ஃபேஸ்புக், ட்விட்டர்ல இல்லையா? அவுட்டேட்டட் ஆயிடுவ' என பயமுறுத்துவார்கள். `ஐயய்யோ  சிங்கிளா அங்கிள் ஆகிடக் கூடாதே' என நாமும் ஒரு சோஷியல் மீடியா விடாமல் எல்லாவற்றிலும் குத்த வைப்போம். அப்போ குத்த வைக்கிறதுதான். திரும்ப எழுந்திரிக்கவே முடியாது. ரெஸ்ட் இன் பீஸ்!

- நித்திஷ்