உலகம் பலவிதம்
கலாய்
Published:Updated:

பப்ளிதான் அழகு!

பப்ளிதான் அழகு!
பிரீமியம் ஸ்டோரி
News
பப்ளிதான் அழகு!

பப்ளிதான் அழகு!

கொழுக் மொழுக்குன்னு அழகா இருக்குறவங்களைப் பார்த்தாலே சிலருக்கு பத்திட்டு எரியுதே ஏன்..? எப்படியெல்லாம் கேட் போட்டு இந்தப் பிஞ்சு மனசை நஞ்சாக்குறாங்க தெரியுமா மை லார்ட் ..?

பப்ளிதான் அழகு!

•   மிட்நைட் 5மணிக்கெல்லாம் எந்திரிக்கச் சொல்லறதெல்லாம் எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா? அதுலயும் இந்த பல்லைக் காட்டிக்கிட்டு அடிக்கிற பனியில வாக்கிங் வேற போகணுமாம்! கேட்டா காலையில ஓடினா கொழுப்பு குறையுமாம்.கொழுப்பு எங்க சார் குறையுது. கூடவே நாலு நாய்தான் வந்து குரைக்குது!

  அதையும் மீறி நாங்க காலையில எந்திரிக்கறது நீங்க கொடுக்குற ஒரு கப் காபிக்காக தானே!  ஒண்ணு தர முடியும்னு சொல்லுங்க இல்ல தர முடியாதுன்னு சொல்லுங்க. அதை விட்டுட்டு வயலும் வாழ்வும் மாதிரி பச்சை பசேல்னு ஒரு கப் அருகம்புல் ஜூஸைக் கொடுக்கறீங்களே? `ஏம்மா நான் என்ன பிள்ளையாரா இதைத் தர்றீங்க?'ன்னு கேட்டா, `அந்த சைஸ்ல தானே இருக்கே... மூடிக்கிட்டு குடி!'ம்பாங்க. நாமளும் பேசாம அதைக் குடிச்சிட்டு... `வாவ், இதுவும் ஒரு புது வகை டேஸ்ட்டு!'ன்னு பேர்கில்ஸ் மாதிரி டயலாக் எல்லாம் பேச வேண்டி இருக்குமே!   

  இந்த காபியைத்தான் ஏமாத்திட்டீங்க...  டிபனாவது முறுவலா வரும்னு தேவுடு காத்துக்கிட்டு இருந்தா, கருகிப் போன சப்பாத்தி வித் கருவேப்பிலை சட்னி காம்போவை நீட்டுவீங்க! தட்டிக் கேட்டா, `இப்படி சாப்ட்டா உடம்பு குறையும்னு எதிர் வூட்டு ஆண்ட்டி சொல்லுச்சு பாப்பா!'னு `டயட்'டை நீட்டுவீங்க. அந்த ஆன்ட்டிய...

  இதெல்லாம் பரவாயில்லை... இந்தத் துணிக்கடைக்கு துணி எடுக்கப் போகும் போது, காசு கொடுத்து நம்மளையே நாம அசிங்கப்படுத்திக்கிற மாதிரி. `ஏம்பா இந்த லெகின்ஸ், அந்த ஜெகின்ஸ்லாம் என்ன விலை?'னு கேட்டா அவனும் சிரிச்சிக்கிட்டே, `இல்லை மேடம் நீங்க டபுள் எக்ஸெல் சைஸ் பாருங்களேன்!'னு நாம் ஆசையா எடுத்த டிரெஸ்ஸைப் பிடுங்கிட்டுப்போயி அடுக்குவான். `உங்க வெயிட் அண்ட் லுக்குக்கு செட் ஆகாது'ன்னு சொல்லிச்சொல்லியே யாருமே எடுத்துட்டுப் போகாத டிரெஸ்ஸை, `இது உங்களுக்கே தைச்ச மாதிரி இருக்குது!'ன்னு சொல்லி நம்ம தலைல கட்டுவாங்க பாருங்க... அதுக்குப்பேருதான் பயங்கர கடுப்பு மொமன்ட்!

 

டிவில ஒரு குரூப் முதல்லயே ஒல்லியா இருக்கிறவங்களை எல்லாம் புடிச்சிட்டு வந்து, `நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் குண்டா அசிங்கமா இருந்தேன். இப்ப இந்த புராடெக்ட்டை பயன்படுத்தினதாலதான் அழகா ஸ்லிம்மா மாறிட்டேன்!'னு வாய் கூசாம பொய் பேசுவாங்க. அங்க அப்படின்னா இங்கிட்டு இன்னொரு ஃபாரின் குரூப், டப்பிங் உபயத்தால் தமிழ் பேசும். `பாருங்க இதோட விலை வெறும் 9999 ரூபாய் மட்டுமே'னு 100 ரூபாய் ஸ்கிப்பிங் கயிற்றுக்கு கொலவெறி ரேட் பேசி ஊரை ஏய்க்கும். இதையெல்லாம் பார்த்துட்டு காலையில ஒரு பத்து ரூபா அதிகமா கேட்டதுக்கு, `விளக்குமாறு பிஞ்சுறும்'னு சொன்ன நம்ம அம்மா, `அடியேய்! இந்தக் கயித்தை வாங்குறியாடி?... அப்படியாவது வெயிட்டு குறையுதான்னு பார்ப்போம்'னு கேட்பாங்க பாருங்க. அதுதான் நம்மளோட உச்சபட்ச அவமானம்!

 

இதை எல்லாம்கூட மன்னிச்சூ பாய்ஸ். ஆனா, இந்த காலேஜ்ல ஸ்லிம்மா இருக்கிற பொண்ணுக எல்லாம் எங்களை மாதிரி குண்டா இருக்கிறவங்களை கூடவே கூட்டிக்கிட்டு சுத்துவாங்க. அது பாசத்துல இல்லை அவிங்க அழகா இருக்காங்கன்னு காட்டிக்கதான்னு தெரிஞ்சும் கூட சுத்துற கொடுமை இருக்கே...ப்ச்ச்ச்ச்!

  எங்களுக்கு மட்டும் எங்கிருந்துதான் கண்டுபிடிப்பாங்களோ இந்தப் பட்டப் பெயரை. குண்டம்மா, பூசணிக்காய், அரக்காப்படி, சிலிண்டர்...  அப்பப்பா இப்படியெல்லாம் இருந்தாலும் எங்களையும் சில பசங்க அமுல்பேபி, ஜாங்கிரி, பப்ளிமாஸ்னு சொல்லுவாங்க.  `அடி லூஸே... பசங்களுக்கு எப்பவும் உங்கள மாதிரி கொழுக் மொழுக்குன்னு இருக்கற பொண்ணுகளைத்தான் பிடிக்கும்'னு சொல்லுவாங்க  பாருங்க... அப்படியே ஜிவ்வுனு வானத்துல பறக்குற மாதிரி இருக்கும்.

- நாகராணி