பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

``நான் போருக்குச் செல்கின்றேன் மகாராணியாரே...’’

ஜோக்ஸ் - 1

``எத்தனை நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்க வேண்டும் என்று கூறிவிட்டுச் செல்லுங்கள் பிரபு!”

- சீர்காழி வி.வெங்கட்

``மன்னர் இந்தளவுக்கா பயந்தவரா இருப்பார்..?’’

ஜோக்ஸ் - 1

“என்னாச்சு..?”

“டிரெட்மில்ல ஓடும்போதுகூட திரும்பித் திரும்பிப் பார்த்திட்டு  ஓடறார்...”

- அதிரை யூசுப்

``ஆப்பரேஷன் தியேட்டர் கதவு ஏன் திறந்தே கிடக்கு?’’

``டாக்டருக்கு எப்ப சந்தேகம் வரும்னு சொல்ல முடியாது...

ஜோக்ஸ் - 1

உடனே லைப்ரரி போயிடுவார்!’’

- அம்பை தேவா

“அச்சு அசலா அப்படியே போட்டோவைப் பார்த்து நம்ம தலைவரோட சிலை செஞ்சதுனு சொன்னாங்க... ஆனால் பார்க்கிறதுக்கு அப்படி தெரியவே இல்லையே...’

ஜோக்ஸ் - 1

“ஆதார் கார்டு போட்டோவைப் பார்த்து செஞ்சதாம்...”

- பழ.அசோக்குமார்