பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 4

"பயம் என்ற வார்த்தை என் அகராதியில் கிடையாது!"

"ஆம் மன்னா! `நடுக்கம்' என்றுதான் போட்டிருக்கிறது!"

- எஸ் கோபாலன்

ஜோக்ஸ் - 4

``வாடகை கேட்க வரும் போதெல்லாம் வீட்டுல யாரும் இருக்க மாட்டேங்கிறீங்களே?’’

``யாரும் இல்லாத வீட்டுக்கு எதுக்கு வாடகை கேட்கறீங்க?’’

- தீபிகா சாரதி

ஜோக்ஸ் - 4

"மன்னர் போருக்குச் செல்வது உறுதி ஆகிவிட்டது..."

"எப்படி...?"

"மகாராணியார் `I’m Single’ என்று ஸ்டேட்டஸ் போட்டுள்ளாரே..."

- கலைவாணன்

ஜோக்ஸ் - 4

``ஒரு தடவை திருடப்போன வீட்டுக்கே, பயமில்லாம திரும்பத் திரும்ப திருடப் போறீங்களே தல... எப்படி?”

``அந்த வீட்ல இருக்குற எல்லாரோட வாட்ஸப்லயும் `லாஸ்ட் சீன்’ பார்த்துதான்!”

- ஆனந்தி ராமகிருஷ்ணன்