
News
ஓவியங்கள்: கண்ணா

``போர் வரப் போகிறதென்று உனக்கு எப்படித் தெரியும்?’’
`` `மன்னர் வேலைக்கு ஆட்கள் தேவை’ன்னு மன்னரே விளம்பரம் கொடுத்திருக்காரே!’’
- அஜித்

``நம்ம வாத்தியார் அடிக்கடி வாட்ஸ் அப் பார்ப்பார்னு எப்படிச் சொல்ற..?’’
``ஆன்சர் பேப்பர்ல ஒவ்வொரு பதிலுக்குமே டபுள் டிக் போட்டிருக்காரே..!’’
- விஜயலக்ஷ்மி

"என்னய்யா... இன்னைக்கு மீட்டிங்கில என் பேச்சு எப்படி..?’’
"அரை லோடு கல்லு அதிகம் தலைவரே...’’
- பழ.அசோக்குமார்

``நான் எம்.எல்.ஏ ஆனால்...’’
``நீங்கதான் கடந்த அஞ்சு வருஷமா எம்.எல்.ஏவா இருக்கீங்க தலைவரே!’’
- அஜித்