
அப்படிச் சொல்வதெல்லாம் ஓல்டு ஃபேஷன். ‘மோடிஜி பதவியேற்றபோது ‘நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வேன் என்றார்.
எல்லாப் பிரச்னைகளுக்கும் ஈஸியா காரணம் சொல்லித் தப்பிக்கிறதுதான் இப்போ டிரெண்டாலஜி. ‘மின் வெட்டுக்குக் காரணம் அணில்தான்’னு சொல்லித் தப்பிச்சிட்டாரு செந்தில் பாலாஜி. இதுமாதிரி என்னென்ன பிரச்னைகளுக்கு ஈஸியா தீர்வு சொல்லி பஞ்சாயத்தை முடிக்கலாம்னு சின்னதா ஒரு யோசனை...
‘ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று சொன்னீர்களே, என்ன ஆச்சு?’ என்று யாராவது கேட்டால் ‘‘பெட்ரோலும் டீசலும் எங்கிருந்து வருகின்றன? ‘பாலைவன ரோஜாக்கள்’ என்று முத்தமிழறிஞர் கலைஞர் திரைப்படத்துக்கு வசனம் எழுதினாரே, அந்தப் பாலைவனமாம் வளைகுடா நாடுகளில் இருந்துதான் வருகின்றன. அவற்றை ‘அரபு ஒன்றியம்’ எனப் பெயர் மாற்றும்படி அந்த அரசுகளிடம் கேட்டிருக்கிறேன். இங்கே அமைச்சர்களும் ஆளுக்கொரு பிரஸ்மீட் திசைக்கொரு தொகுதி எனத் திரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் யாராவது ப்ரீயானதும் அரபு ஒன்றியத்திற்கு அனுப்பி டீல் பேசிவிடவேண்டியதுதான். அதுவரை நீங்களும் என்னைப்போல் மிதிவண்டியில் பயணம் செய்யலாம்” என்று பெடல் மிதித்து ‘பெப்பே’ காட்டலாம்.

வலிமை அப்டேட் தாமத மாவதற்கான காரணத்தை போனிகபூரோ, பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திராவோ இப்படிச் சொல்லிச் சமாளிக்கலாம். ‘‘தல ரசிகர்களின் மனவலிமையை சோதிக்கவே இந்தத் திருவிளையாடல். வருங் காலத்தில் ‘வலிமையான' ரசிகர்களாக தமிழ் கூறு நல்லுலகில் அறியப்பட இதைவிடச் சிறந்த வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறோம்! எதிர்காலத்தில் என்ன வேண்டு மானாலும் நடக்கலாம். தலகூட அரசியலுக்கு வரலாம்... அப்போது வலிமையான தொண்டர்கள் தேவை என்பதால் அவரின் இந்தப் பரி`சோதனை' முயற்சி பலனளிக்கும்!’’
பெட்ரோல், டீசல் விலை கூடிக்கொண்டே போவதற்கு ‘சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை...' -அப்படிச் சொல்வதெல்லாம் ஓல்டு ஃபேஷன். ‘மோடிஜி பதவியேற்றபோது ‘நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்வேன் என்றார். அதன்படியே வேலைவாய்ப்பின்மை, மத்திய அரசின் கடன், கொரோனா கேஸ்கள் என அனைத்தையும் முன்பைவிட லட்சக்கணக்கில் அதிகப்படுத்தியிருக்கிறார். இப்போது பெட்ரோலின் முறை. அவரின் பெரிய மனது காரணமாகத்தான் இதைக் கடைசியாக ஏற்றுகிறார் என்பதைப் பொதுமக்கள் கருத்தில் கொள்ளவேண்டும்!’ எனச் சொல்லிவிடலாம்.

சமையல் எரிவாயு விலையேற்றத்துக்கும் வேற லெவலில் காரணம் சொல்வார்கள் உள்ளூர் பா.ஜ.க-வினர். ‘‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. மரபுவழியை மீட்டெடுக்க... நம் பாரம்பர்ய விறகடுப்புக்கு மாறவும் மக்கிப்போகும் மாமருந்தான மாட்டுச் சாணத்தை உரிய வகையில் எரிபொருளாகப் பயன்படுத்தவுமே மோடி அவர்கள் காஸ் விலையேற்றத்தைச் செயல்படுத்துகிறார்.’’ எப்பூடி..?
‘துரோகம் நம் இனத்தின் சாபம்' என ‘சுருளி' எடப்பாடியைப் பார்த்துச் சொன்ன லேடி சிவதாஸ் சின்னம்மா இப்போ ஆடியோவில் செஞ்சுரி அடிக்கிறார். ‘என் முகம் எல்லாருக்கும் ஏகப்பட்ட கேஸ் புண்ணியத்துல ரீச் ஆயிருக்கு. ஆனா என் வாய்ஸ் யாருக்குமே தெரியாது. எம்.ஜி.ஆர் என்ன, ஜெயா அக்காவே நான் சேர்ந்தாப்ல நாலு வார்த்தை பேசிக் கேட்டதில்ல. ஓகே அக்கா, ஸாரி அக்கா தாண்டிப் பேச விட்டதுமில்ல. அதனால என் வாய்ஸைத் தமிழ் மக்களுக்கு ரீச் ஆக்கவே இந்தப் போன்கால் விளையாட்டு’ எனச் சமாளிக்கலாம்.

சேலத்திலே தங்கிவிடுவதற்கு எடப்பாடியார் சொல்லும் காரணம் என்ன?‘‘சிலுவம்பாளையம் மக்கள் என்மீது பாசமும் நேசமும் கொண்டவர்கள். சேலத்துக்கும் சென்னைக்கும் நான் சாதா வழிச்சாலையில் பயணம் செய்வதை அந்த மக்கள் விரும்பவில்லை. உடல் என்னாவது எனச் சொல்லி என்னை ஓய்வெடுக்கச் சொல்கிறார்கள். எட்டுவழிச்சாலை வந்திருந்தால் நான் சுழன்று பணி செய்ய ஏதுவாக இருந்திருக்கும். அடுத்தமுறை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சி மலரும். அப்போது சுழன்று மக்கள் பணி செய்வான் இந்த ஏழை விவசாயி..!’’

மநீம தேர்தல் தோல்விக்கு கமல் சொல்லும் வித்தியாச காரணம் என்ன தெரியுமா?‘‘யாம் ‘மநீம' என்று சொல்லும்போது ‘எனிமா' என்ற ஓசையே எழுகிறது. எனிமா கொடுத்தால் தேவையற்ற நச்சுப்பொருள்கள் உடலிலிருந்து வெளியேறி உங்கள் குடல் சுத்தமாகும். ஆனால், இந்த முறையில் நேரம் பிடிக்கும். அதேபோல் மநீமவை உங்களுக்குப் பிடிக்க நேரம் பிடிக்கும். இப்போது எனிமா கொடுத்து நச்சை வெளியேற்றும் படலம் நடக்கிறது. சென்றோரெல்லாம் நச்சுக்களே! தங்குவது நல்வித்துக்களே! விரைவில்மநீம உருமாறிய எனிமாவாக உங்கள் முன் வரும். அதுவரை விடைபெறுவது உங்கள் நான்!’’

சீமான் ஈழக் கதைகள் சொல்வது ஏன்? ‘‘நம் முப்பாட்டன்கள் வாழ்ந்த காலத்தில் நம்மைவிடப் பெரிய உயிரிகளான தொன்மாக்கள் அதான் டைனோசர்கள் வாழ்ந்து வந்தன. அவற்றின் கால்களுக்கு நடுவே சிக்கி நைந்துவிடாமல் வேட்டையாடி சதா சர்வகாலமும் பயத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இரவில் தூங்குவதற்காகக் கதைகளைப் படைத்தார்கள். அம்மரபுக் கண்ணி பட்டுப்போகாமல் இருக்க, தொன்மாவுடனான தொப்புள்கொடி உறவு அறுந்துபோகாமல் இருக்கவே எள்ளல்களைக் கண்டுகொள்ளாமல் இப்போதும் உங்களுக்குக் கதைகளைச் சொல்கிறேன். கவனித்துப் பாருங்கள், பிரமாண்ட ஆமை, தொன்மா முட்டை சைஸ் இட்லிக்கறி என அவற்றின் மீட்சியை என் கதைகளில் நீங்கள் காணமுடியும். இப்படித்தான் ஒருமுறை டெரோசோரஸ் பணியாரம் அண்ணன் செய்து தந்தாரு... அதுல என்ன விசேஷம்னா...’’

அந்நிய மண்ணில் கிரிக்கெட் தொடர் தோல்விக்கு விராட் கோலி சொல்லும் காரணம்... ‘‘என்னை வளர்த்து ஆளாக்கின குரு தோனிதான். ஓவர்சீஸ்ல அவரை மிஞ்சின கேப்டன் ஆயிட்டேன்னு நீங்க எல்லாரும் சொல்லும்போது குருவுக்கு துரோகம் பண்ணிட் டேனோன்னு என் மனசு குடையுது. நான் என்னிக்குமே குருசாமிக்கு அடங்கின கோலிதான். என் குருபக்தியைக் காட்டவே இந்தத் தோல்வி. அடுத்ததாக கங்குலி மேல் இருக்கும் மரியாதையில் அவர் கே.கே.ஆர் அணியை வழிநடத்தியது போன்றே நான் ஆர்.சி.பியை வழிநடத்துவேன் என...!’’