சமூகம்
Published:Updated:

‘ஹேப்பி... இன்று முதல் ஹேப்பி...- தலைவர்களின் நியூஇயர் ரெசொல்யூஷன்ஸ்!

நியூ இயர் ரெசொல்யூஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
நியூ இயர் ரெசொல்யூஷன்

அப்படியே, அமைச்சர் கீதா ஜீவன்கிட்டருந்து `குழந்தைகள் நலத்துறை’யைப் பிடுங்கி, பேரன் இன்பநிதிக்கு `பர்த் டே கிஃப்டா’ கொடுக்குறோம்!

2023 பிறந்துவிட்டது. நம்ம உள்ளூர் அரசியல் பிரபலங்கள் முதல் அகில இந்திய பிரபலங்கள் வரை என்னென்ன மாதிரியான `நியூ இயர் ரெசொல்யூஷன்’ எடுப்பார்கள் என்பதை ஜாலியாகக் கற்பனை செய்து பார்த்தோம்...

சீமான்

`நாட்டையே ஆளத் துடிக்குற எனக்கு வீடு இல்ல’னு சொல்லி புது ஃபார்ச்சூன் காரு, ஈ.சி.ஆர்-ல வாடகை வீடுன்னு செட்டிலான மாதிரி, இந்த வருஷமும் தம்பிங்ககிட்ட ‘கதை’ சொல்லி பரப்புரைக்குப் பறந்து போக `உலங்கு வானூர்தி’ ஒண்ணை ஏற்பாடு பண்ணணும்!

திருமாவளவன்

என்ன ஆனாலும், என்ன சொன்னாலும், யாரு புதுசா வந்தாலும் தி.மு.க கூட்டணியை விட்டுட்டு வெளிய போயிடக் கூடாது சிதம்பரம்!

‘ஹேப்பி... இன்று முதல் ஹேப்பி...- தலைவர்களின் நியூஇயர் ரெசொல்யூஷன்ஸ்!

வைகோ

இந்த உலகமே நம்மைப் பத்திப் பேசணும். அதுக்கு, `மகன்கள் நலக் கூட்டணி’னு புதுக் கூட்டணி ஆரம்பிக்கிறோம். அதுல, தே.மு.தி.க., பா.ம.க-வையெல்லாம் உள்ள இழுத்துப்போட்டு ஃபன் பண்றோம்!

வேல்முருகன்

இன்னும் ரெண்டு டோல்கேட்டை உடைக்குறோம். கட்சியை பலப்படுத்துறோம்!

டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க-வை மீட்கணும்!

அ.தி.மு.க-வை மீட்கணும்!

அ.தி.மு.க-வை மீட்கணும்!

மு.க.ஸ்டாலின்

`திராவிட மாடல், திராவிட மாடல்’னு இன்னும் 50,000 தடவை சொல்றோம். அப்படியே, அமைச்சர் கீதா ஜீவன்கிட்டருந்து `குழந்தைகள் நலத்துறை’யைப் பிடுங்கி, பேரன் இன்பநிதிக்கு `பர்த் டே கிஃப்டா’ கொடுக்குறோம்!

‘ஹேப்பி... இன்று முதல் ஹேப்பி...- தலைவர்களின் நியூஇயர் ரெசொல்யூஷன்ஸ்!

இ.பி.எஸ்

ஒற்றைத் தலைமையை உறுதி பண்ணிட்டு, சசிகலா, டி.டி.வி., ஓ.பி.எஸ் மாதிரி இன்னும் கொள்ளப்பேருக்குக் கட்டம் கட்டணும்!

ஓ.பி.எஸ்

நம்மளோட பலம் என்னன்னு உலகத்துக்குக் காட்டணும். இனிமே கேமரா இருக்கும்போது, மோடி, அமித் ஷாவைப் பார்த்துக் குனியக் கூடாது!

அண்ணாமலை

2k கிட்ஸ்-களுக்கும் கட்சியைக் கொண்டுசெல்லும்விதமா `சொல்லுங்க மாமாகுட்டி’ டைப்ல புதுப்புது ஆடியோஸ் ரிலீஸ் பண்ணணும். ஆடு வித்த காசுல நல்ல இண்டியன் பிராண்டடு வாட்ச்சா பாத்து வாங்கணும். அதுல சாவர்க்கரோட லெதர் ஷூவுலருந்து வார் செஞ்சு போட்டதா கம்பிகட்டி, தேசப்பற்றை வெளிக்காட்டணும். மறக்காம பில்லு வாங்கணும்!

ராகுல் காந்தி

இன்னும் பெருசா தாடி வளக்குறோம். மோடியைவிட நாமதான் ‘பெருசு’னு கெத்து காட்டுறோம்!

மோடி

மொத்தம் இருக்குற 193 நாட்டுல 63 நாட்டுக்கு டூர் அடிச்சாச்சு. அடுத்த கொரோனா அலை வர்றதுக்குள்ள பாக்கி இருக்குற 130 நாட்டுக்கும் போயிட்டு டாஸ்க்கை கம்ப்ளீட் பண்ணிடணும். அதுக்கப்புறமா ‘காவி செவ்வாய்’க்கு போறதைப் பத்தி இஸ்ரோ சிவன்கூட ‘டிஸ்கஸ்’ பண்ணிக்கலாம்!

நிர்மலா சீதாராமன்

மோடி ஆட்சியில 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்த்திருக்கோம். புது வருஷத்துல மிச்சமிருக்கிற நிறுவனங்களையும் முடிச்சிவிட்டுரணும்!

‘ஹேப்பி... இன்று முதல் ஹேப்பி...- தலைவர்களின் நியூஇயர் ரெசொல்யூஷன்ஸ்!

அமித் ஷா

முதல்ல இமாச்சல் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கணும்... அடுத்து சிவசேனா, அ.தி.மு.க மாதிரி 2024 எம்.பி தேர்தலுக்குள்ள அத்தனை மாநிலக் கட்சிகளையும் உடைக்கணும்!

அரவிந்த் கெஜ்ரிவால்

இந்த வருஷத்துல நடக்கப்போற ஒன்பது மாநில தேர்தல்கள்லயும் பா.ஜ.க ஜெயிச்சாலும் பரவால்ல... காங்கிரஸை மண்ணைக் கவ்வ வெக்கணும். இந்துத்துவம் பேசுறதுல பா.ஜ.க-வையும் மிஞ்சணும்!

பிரேமலதா

மாஸா... கெத்தா... இளைய கேப்டனை மேடை ஏத்துறோம். இணைய வைரலுக்கு கன்டென்ட் கொடுக்குறோம்!

ராமதாஸ்

போராட்டம், பொதுக்கூட்டம்னு பிஸியா இருந்த 90-கள்ல ரிலீஸாகி, நான் மிஸ் பண்ணின படத்தையெல்லாம் பாத்து முடிக்கணும். எல்லாத்துக்கும் ட்விட்டர்ல ரிவியூ போடணும். அதுக்கு புளூ சட்டை மாறன் மாதிரி, `யெல்லோ சட்டைக்காரன்’னு யூடியூப் சேனல் ஒண்ணு ஆரம்பிக்கணும்!

அன்புமணி

`அன்புமணி ஆகிய நான்...’ - பழைய ஸ்க்ரிப்ட், வீடியோ, போஸ்டர், காஸ்ட்யூமையெல்லாம் தூசுத்தட்டி திரும்ப எடுக்கணும். தேர்தல் வருதுல...

கமல்

`இந்தியன் 2’-வை பான் இந்தியா படமா வெளியிடுறோம். 2024-ல எம்.பி-யாகி, சசி தரூருக்குப் போட்டியா, நிறைய லேடி எம்.பி-க்களோட செல்ஃபி எடுக்குறோம்!

‘ஹேப்பி... இன்று முதல் ஹேப்பி...- தலைவர்களின் நியூஇயர் ரெசொல்யூஷன்ஸ்!

ரஜினி

‘ஜெயிலர்’ பட ரிலீஸுக்கு முன்னாடி, மோடியைச் சந்திச்சு அரசியல் பரபரப்பைக் கிளப்பணும்... படத்தை ஓட்டணும்!

ஆர்.என். ரவி

போன வருஷம் கையெழுத்து போடாம 30 ஃபைல் இருக்கு. இந்த வருஷம் இன்னும் 70 ஃபைலை பெண்டிங்ல வெச்சு சதம் அடிக்கணும்!

சரத்குமார்

நம்ம பேச்சைக் கேட்டு, யார் யாருல்லாம் ஆன்லைன் ரம்மி விளையாடுறாங்கனு கண்டுபிடிக்கணும். முதல் வேலையா அவங்களுக்கு உறுப்பினர் அட்டை அனுப்பி அதிர்ச்சி கொடுக்கணும்!