
மனுஷனா இருக்குறது முக்கியம் இல்ல... வேக்ஸினேட்டட் மனுஷனா இருக்குறதுதான் முக்கியம்!
நம்ம மாஸ் ஹீரோக்கள் கொரோனாவுக்கு எதிராக பஞ்ச் பேசினால் இப்படித்தானே இருக்கும்?

ரஜினி
* தடுப்பூசி போட்டா நல்லதுன்னு ஆண்டவன் சொல்றான்... அருணாச்சலம் செய்றான்!
* கண்ணா சோஷியல் டிஸ்டென்ஸிங் பண்ணு... ஏன்னா, பன்னிங்கதான் கூட்டமா வரும்; சிங்கம் சிங்கிளாதான் வெளிய வரும்!
* உன் வாழ்க்கை உன் மாஸ்க்லதான் இருக்கு!
* ஏய் கொரோனா, நீ உருமாறி வந்தாலும் உன்னை உருத்தெரியாம அழிப்பேன் டா!
* ஏய் கொரோனா, பார்க்கத்தானே போறே எங்க வேக்ஸினோட ஆட்டத்தை!
* நான் உயிரோட இருக்குறதுதான் உன் பிரச்னைன்னா தடுப்பூசி போட்டு, மாஸ்க் போட்டு சமூக இடைவெளியோட சுத்துவேன்டா... கெத்தா, ஸ்டைலா!

கமல்
* மனுஷனா இருக்குறது முக்கியம் இல்ல... வேக்ஸினேட்டட் மனுஷனா இருக்குறதுதான் முக்கியம்!
* நாலு பேருக்கு நல்லதுனா ஹோம் குவாரன்டைன் தப்பில்லை!
* நான் கொரோனா இல்லைன்னு சொல்லலிங்க, இல்லாம இருந்தா நல்லாருக்கும்னுதான் சொல்றேன்!
* முன்னபின்ன தெரியாத மனுஷனுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் கொடுக்க ஓடிவர்ற அந்த மனசு இருக்கே... அதுதாங்க கடவுள்!
* மாஸ்க் போட்டவன் மனுஷன்... த்ரீ லேயர் மாஸ்க் போட்டவன் பெரிய மனுஷன்!
* உனக்குள்ள முழிச்சுக்கிட்டிருக்குற அதே மிருகம்தான் எனக்குள்ளயும் இருக்கு... இரு ட்ரீட்மென்ட் பண்ணி உன்னை அழிக்கிறேன்!
* கொரோனா பாதி மனிதன் பாதி கலந்து செய்த கலவை நான்..!

விஜய்
* ஒருவாட்டி முடிவெடுத்து வேக்ஸின் போட்டா ரெண்டாவது டோஸும் போடுவேன்!
* டேய் கொரோனா... இந்த ஊருக்கு வேணும்னா நீ மாஸா இருக்கலாம். ஆனா, வேக்ஸின் போட்ட என் முன்னாடி நீ தூசுடா!
* இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம், அந்த இடம், எங்கேயுமே எனக்கு பயம் கிடையாதுடா... ஏன்னா ஆல் ஏரியாலயும் நான் மாஸ்க், சோஷியல் டிஸ்டன்ஸிங், ஹேண்ட் சானிட்டைஸிங் பண்ணிட்டு சுத்துவேன்டா!
* ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேட்க மாட்டேன். தடுப்பூசி போட்டுக்குவேன்!
* ரெண்டு வாட்டி ஊசி போடணுமா..? எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா?
* ஏய் கொரோனா மூணாவது அலைன்னு திரும்ப வந்தா திருப்பி அடிப்பேன்!
* நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று ஒருநாள் உன்னையும் கேட்கும். அதுக்குள்ள ஓடிப்போயிடு கொரோனா!

அஜித்
* கொரோனாவுக்கு பயப்படாதவங்களுக்கு தினம் தினம் சாவு... பயப்படுறவனுக்கு ஒருமுறைதான் சாவு!
* என் நுரையீரலைத் தொடணும்னா ட்ரிபிள் லேயர் மாஸ்க்கைத் தாண்டி தொட்றா பார்க்கலாம்!
* என் வாழ்க்கையில ஒவ்வொரு மாஸ்க்கும் ஒவ்வொரு ஹேண்ட் சானிட்டைசரும் நானா காசு கொடுத்து வாங்குனதுடா!
* ஒரு மெல்லிசான கோடு... கோட்டுக்கு அந்தப் பக்கம் நீ பாதுகாப்பா இரு... கோட்டுக்கு இந்தப் பக்கம் நான் பாதுகாப்பா இருக்கேன். நாம ரெண்டு பேரும் சேர்ந்து கொரோனா விரட்டுவோம்!
* இந்த உலகம் முழுக்க நீ பரவினாலும்... எல்லாச் சூழ்நிலையிலும் நீ தோத்துட்டேன் தோத்துட்டேன்னு என் முன்னாடி நின்னு நீ அலறினாலும் நானா ஒத்துக்குற வரை நீ என்னை ஜெயிக்க முடியாது... Never ever give up!
* ஏய் கொரோனா, உன் உடம்புல கை இருக்கும் மூக்கு இருக்கும் முழி இருக்கும் ஆனா உயிர் இருக்காது... அது!