சினிமா
தொடர்கள்
Published:Updated:

மொத்தம் ரெண்டு பேரு!

மொத்தம் ரெண்டு பேரு!
பிரீமியம் ஸ்டோரி
News
மொத்தம் ரெண்டு பேரு!

‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடுறவன்- ‘புளிமாங்கா புளி’ பாடுறவன்!

‘கற்றது தமிழ்’ படத்தில் ஒரு வசனம் வரும். சென்னையில ரெண்டே பேருதான். ஒருத்தன் சத்யம் தியேட்டருக்குள்ள இருக்கிறவன் - இன்னொருத்தன் வெளியே நிக்கிறவன். ஏடிஎம் உள்ளே நிக்கிறவன்- வெளியே நிற்பவன்... இது ஒரு பொது தியரி. கிட்டத்தட்ட அதுபோல இன்றைய தேதியில் தமிழனை ஜாலியாக இரண்டுவகையாகப் பிரிக்கலாம். இதோ இவ்ளோதான் மேட்டரே...

* குக்கூ வித் கோமாளி சீசன் முடிஞ்சாலும் ஹாட் ஸ்டாரில் தேடிப் பார்த்து சிரிக்கிறவன் - அந்தப் பேரை ஃபேஸ்புக்கில் பார்த்தால்கூட காண்டு ஆகிறவன்.

* கொரோனாவுக்குத் தடுப்பூசி போட்டுக்கிட்டவன் - `சைடு எஃபெக்ட் வருமாமே?’ன்னு டர்ராகுறவன்!

* ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடுறவன்- ‘புளிமாங்கா புளி’ பாடுறவன்!

* மோடியைத் திட்டுறவன் - `மோடியைத் திட்டுறவனை ‘ஆன்ட்டி இண்டியன்’னு திட்டுறவன்!

* மாஸ்க்கைக் கழற்றிட்டுத் தும்முறவன் - மாஸ்க்கோடு தும்முறவன்.

மொத்தம் ரெண்டு பேரு!

* ஊரடங்கில் வீடடைந்து கிடப்பவன் - ஊரடங்கிலும் அடங்காமல் வெளியே சுத்துறவன்.

* தினமும் ஐ.பி.எல் மேட்ச் பார்த்து பாய்ண்ட் டேபிள்ல பி.பி மாத்திரை தேடுறவன் - `மேட்ச் பிக்ஸிங் ப்ரோ’ன்னு ஐ.பி.எல்லையே ஸ்கிப் பண்றவன்.

* தோனி சிங்கிள் டிஜிட் அடிச்சாலும் முட்டுக்கொடுக்குறவன் - தோனிக்கு முட்டிவலின்னு வி.ஆர்.எஸ் கொடுக்கச் சொல்றவன்.

* வெப் சீரிஸ் மட்டும் பார்க்குறவன் - வெப் சீரிஸும் பார்க்குறவன்.

* ஓட்டுப்போட்டுட்டு கம்முனு இருக்கிறவன் - மை வெச்ச விரலோடு செல்ஃபி போட்டு லைக்ஸ் பார்க்குறவன்.

* மாஸ்க்கை பாக்கெட்ல மடிச்சி கர்ச்சீப் போல யூஸ் பண்றவன் - கர்ச்சீப்பையே மாஸ்க் போல யூஸ் பண்றவன்.

* டாஸ்மாக் பக்கமே போகாதவன் - டாஸ்மாக்ல, ‘வரிசையில வா தல’ என்பவன்.

* உச்சி வெயிலில் டீ குடிப்பவன் - உச்சிவெயிலில் மோர் குடிப்பவன்.

* சொந்தக்காரன் கல்யாணத்துக்குப் போகாமல் கூகுள் பேயில் மொய் செய்றவன். - நீ ரசத்த ஊத்து சித்தப்பு என பந்தியில் அமர்ந்து தொந்தியை நிரப்புறவன்.

* இதைப் படித்துவிட்டு ‘செம காமெடி’ என்று சிரிப்பவன் - மொக்கை போடாதீங்கய்யா என்று முறைப்பவன்!