
“இன்னிக்கு ஷூட்டிங்கை அவங்கதான் ஸ்பான்சர் பண்றாங்களாம்!’’

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...
பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com
கடைசி தேதி: 16.11.2021
அவள் விகடன் 9.11.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

சிறப்புப் பரிசு - தவா
``போன வருஷமும் 18 வயசுன்னீங்க... இப்பவும் அதையே சொல்றீங்க?’’
``கொரோனாவால ஒரு வருஷம் அப்படியே ஸ்தம்பிச்சு போச்சே!’’
- பி.எம்.ஜெ.சுமையா, சென்னை-14
ரூ.250
``டைரக்டர் இந்த ஷாட்டை கீழிருந்துதானே எடுக்க சொன்னார்... கேமராமேன் ஏன் க்ரேன் ஷாட் எடுக்குறாரு?’’
``அவருக்கு நாய்ன்னா பயமாம்!’’
@சுப்புலெட்சுமி சந்திரமெளலி
ரூ.250
“டைரக்டர் மைக்ல ஏதோ துணிக்கடை பெயரையெல்லாம் சொல்றாரே?’’
“இன்னிக்கு ஷூட்டிங்கை அவங்கதான் ஸ்பான்சர் பண்றாங்களாம்!’’
- பா.ஜோதிமணி, திருப்பூர்
ரூ.250
“படம் முழுக்க ஹீரோ மாஸ்க்கோடவே நடிச்சிருக்காராமே...”
“அப்ப அவர் இனி `மாஸ்’ ஹீரோ இல்லை. `மாஸ்க்’ ஹீரோன்னு சொல்லு!”
- ஆர்.பூஜா, சென்னை-1

அவள் விகடன் 9.11.2021 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...
சிறப்புப் பரிசு தவா
``இங்க பாருங்க... OTP வந்தாதான் தடுப்பூசி போட்டுக்குவேன்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர். பேசாம கையைக் காட்டுங்க.’’
- என்.கோமதி, நெல்லை
ரூ.250
``என்ன பார்க்கறீங்க?’’
``ஊசி போடும்போது வலிக்காம இருக்க யூடியூப்ல ஏதாவது டிப்ஸ் போட்டிருக்காங்களான்னு பார்க்கறேன்.’’
- இரா.நந்தினி, வந்தவாசி
ரூ.250
“நீங்க போலி டாக்டர்னு கூகுள் ரெவ்யூல சொல்லுது. உண்மைதானா டாக்டர்?!”
- ஷாந்தி, திருச்சி
ரூ.250
‘‘என்னோட டெஸ்ட் ரிப்போர்ட் எல்லாம் நார்மல்னு போன்ல மெசேஜ் வந்திருக்கு!’’
``அப்போ நான் சொன்ன லேப்ல டெஸ்ட் பண்ணலையா?’’
- எச்.சீதாலட்சுமி, ஆலுவா, கேரளா