பேட்டி - கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 1

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

"நம்ம தலைவர் வீட்டுக்கு எதுக்கு 'சோதனைச் சாவடி'னு பேரு வெச்சிருக்காரு?"

"இவர் போலி டாக்டர்னு எப்படி கண்டுபிடிச்சாங்க...?"

"போஸ்ட்மார்டம் பண்றதுக்கு முன்பு ‘அனஸ்தீஸியா கொடுத்தாச்சா’ன்னு கேட்டிருக்கார்..."

ஜோக்ஸ் - 1

- அதிரை யூசுப்

"நம்ம தலைவர் வீட்டுக்கு எதுக்கு 'சோதனைச் சாவடி'னு பேரு வெச்சிருக்காரு?"

"ஊரில் என்ன தப்பு நடந்தாலும், போலீஸ் முதலில் சோதனை போடுவது தலைவர் வீட்டைத்தானாம்"

ஜோக்ஸ் - 1

- மாணிக்கம்

“அந்த நடிகரை வச்சு படம் எடுத்து முடிக்கறதுக்குள் தயாரிப்பாளர் சொத்தை எல்லாம் வித்து ஏழையாயிட்டார்”

“அதான், ‘வறுமையுடன் வழங்கும்’னு டைட்டில்ல போடறாங்களோ?”

ஜோக்ஸ் - 1

- எஸ்.முகம்மது யூசுப்.

“புலவர் இல்லாமலே பாடல் வெளியீடா?”

“ஆம் மன்னா. தற்போது லிரிக் வீடியோ மட்டும் வெளியிட்டுவிட்டு ஆடியோ லாஞ்சில் அவர் பாடுகிறாராம்.”

ஜோக்ஸ் - 1

- தஞ்சை சுபா

"என்னைக் கட்சியில் இருந்து ஒதுக்க சதி நடக்கிறது..."

"உங்களை ஒதுக்கிட்டு மிச்சமிருக்கிற நான் மட்டும் எப்படி தலைவரே கட்சியை நடத்த முடியும்?"

ஜோக்ஸ் - 1

- அதிரை யூசுப்

"சர்வர்.. என்னப்பா பிளேட்ல ஸ்டிக்கர் பொட்டு வெச்சிருக்கே..?"

"அது மினி சப்பாத்தி சார்..!"

ஜோக்ஸ் - 1

- சி.சாமிநாதன்