ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

பத்து நாள்தான் லீவ் கிடைச்சது... நீங்க 15 நாள் குவாரன்டைனில் இருக்கச் சொல்றீங்க... அதான்...

அவள் விகடன் 4.1.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

‘`சார்... அந்தப் பக்கம் போகாதீங்க...’’

‘`ஏன்?’’

‘`ஏர்போர்ட் கண்ணாடி, 200-வது முறையா உடைஞ்சு கீழே விழப்போகுது!’’

- பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம்

***

“ஏன் வந்த நாட்டுக்கே திரும்பிப் போறீங்க?”

“பத்து நாள்தான் லீவ் கிடைச்சது... நீங்க

15 நாள் குவாரன்டைனில் இருக்கச் சொல்றீங்க... அதான்!”

- ப.உமாமகேஸ்வரி, நெய்வேலி

``சமூக இடைவெளி தேவைதான். அதுக்குன்னு உங்களுக்கு மட்டும் தனியா ஃபிளைட் கேட்டா எப்படி சார்..?’’

- எம்.விக்னேஷ், மதுரை-9

‘‘ஃபாரின் மாஸ்க் இருந்தா ஒண்ணு கொடுத்துட்டுப் போங்க... பாஸ்...’’

- மல்லிகா அன்பழகன், சென்னை-78

ஜோக்ஸ்

அவள் விகடன் 4.1.2022 (சென்ற) இதழில் இந்தப் படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஒவ்வொன்றும் பரிசு ரூ.250 பெறுகிறது

``அம்மா... இந்த கிறிஸ்துமஸ் தாத்தா ரெண்டு தடுப்பூசி போட்டு இருக்காரான்னு கேளு... அப்புறமா நான் கிஃப்ட் வாங்கிக்குறேன்.’’

- கீதா கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்

“போங்க தாத்தா... எப்பப் பார்த்தாலும், குச்சி மிட்டாய், குரங்கு பொம்மைனு கொண்டு வந்துட்டு... ஒரு ஸ்மார்ட் போன், பீட்சா, வீடியோ கேம்ஸ்... இதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதா..?”

- எஸ்.ராஜம், ஸ்ரீரங்கம்

“தாத்தா நீங்க கேக், ஸ்வீட் எல்லாம் யாருக்கும் கொடுக்காம நீங்களே தின்னுட்டீங்களா... வயிறு இம்மாம் பெரிசா ஊதியிருக்கு...’’

- பி.இலக்கியா, மதுரை-16

“தாத்தா நீங்க வந்திருக்கிறது வீடியோ கான்ஃபரன்ஸ்ல இல்ல... நேராத்தான். பரிசைக் காணோம்?”

- ஆர்.ராமலெட்சுமி, நெல்லை டவுன்

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...

`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.

பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

சிறந்த ஜோக்குக்கு சிறப்புப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 10.1.2022