
ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது
அவள் விகடன் 27.9.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“காய்கறிக் கடைக்காரர் பயங்கர டென்ஷனா இருக்காரே... அப்படி என்னதான் கேட்டே அவர்கிட்ட..?''
“ரெண்டு முழம் காலி`ஃப்ளவர்’குடுங்கனு கேட்டேன்...”
- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்
“இவ்வளவு துல்லியமா எடை போடறாரே... இவரு காய் விக்கறதுக்கு பதிலா நகை விக்க போகலாம்.”
“நகைக்கடை வச்சிருந்தவருதான். அதுல லாபம் கம்மின்னு காய்கறி விக்க வந்துட்டாரு.”
- இல.தமிழ்க்குயில், சங்கராபுரம்
“எதுக்கு கடைக்காரர் உன்மேல டென்ஷனா இருக்கார்.”
“வெண்டைக்காயை உடைச்சு பார்த்துதான் வாங்கற மாதிரி பூசணிக்காயையும் உடைச்சுப் பார்த்துட்டு வாங்கட்டுமான்னு கேட்டேன்.”
- கீதா கிருஷ்ணரத்னம், காட்டாங்குளத்தூர்

‘`நீங்க கேட்ட பிளாக் காபியைத்தான் கொடுத்தேன் சார். இவர் சரக்குன்னு நெனைச்சு குடிச்சுட்டு சாய்ஞ்சுட்டிருக்கார்...’
- எஸ்.ஜானகி, சென்னை-20
“சாப்பிடுவதற்கு முன்னாடியே அவர்கிட்ட ஜிஎஸ்டி உண்டுன்னு சொல்லியிருக்க வேண்டியதுதானே?!
- பி.திலகவதி, தஞ்சாவூர்
“சார்... அவரை எழுப்புங்க... ஆர்டர் எடுக்கணும்.”
“இவ்ளோ நேரம் வராமல் தூங்க வெச்சது நீதான். நீயே எழுப்பு...”
- என்.மாலதி, சென்னை-91

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்...
`இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு
இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும்.
பிரசுரமாகும் ஜோக்குகளுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com
கடைசி தேதி: 4.10.2022