அவள் விகடன் 6.12.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...
அவள் விகடன் 6.12.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

``டெய்லி இதே போர்டு மாட்டியிருந்தா ஜாலியா இருக்கும்ல..!''
- சுஜாதா ஜோசப், திருச்சி.
****
``நான் அப்பவே சொல்லலை... கடவுள் இருக்கான் குமாரு."
- ச.கிருஷ்ணவேணி, கோபி.
அவள் விகடன் 6.12.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

“கரன்ட் பில் கட்டிட்டு வர்றியா..?”
“இல்ல... கரன்ட் பில் கட்டுறதுக்கு பேங்க்ல லோன் அப்ளை பண்ணிட்டு வர்றேன்...”
- ஆர்.பத்மப்ரியா, ஸ்ரீரங்கம்
“இ.பி அதிகாரி சத்தம் போடுற அளவுக்கு
அப்படி என்ன கேட்டே?”
“மாடித்தோட்டம் போட்டிருக்கேன்... இலவச மின்சாரம் தர முடியுமான்னு கேட்டேன்!”
- எஸ்.சாந்தி, சென்னை-129
``ஆதார் கார்டை, மின் இணைப்பு எண்ணோட இணைக்கப் போனியே! என்னாச்சு?''
‘` `கரன்ட் இல்ல,
நாளைக்கு வாங்க’ன்னு சொல்லிட்டாங்க...”
- இரா.அனுசூயா, நிலக்கோட்டை
“எப்போதும் உங்க மாமனார் தானே கரன்ட் பில் கட்ட வருவாரு, இன்னிக்கு
நீ வந்து இருக்கே.”
“கரன்ட் பில்ல பார்த்து எங்க மாமனார் மயக்கம் போட்டு இப்ப ஆஸ்பத்திரியில இருக்கார் அதான்.”
- ஆர்.சுகன்யா, சென்னை-117

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் ஜோக்கு களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!
அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,
757, அண்ணாசாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com
கடைசி தேதி: 13.12.2022