லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அவள் விகடன் 31.1.2023 (சென்ற) இதழில் அருகே உள்ள இரண்டு படங்களை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

``காஸ்ட்லியான கரடி பொம்மையை எடுக்காதடா செல்லம்... வீட்டுக்குப்போனா உங்கப்பா கரடியா கத்த ஆரம்பிச்சிடுவாரு!''

- பி.மது மம்தா, தஞ்சாவூர்

``ஏண்டி பொம்மையை கட்டிப்பிடிச்சிக்கிட்டு கத்துறே?''

``நான் எங்கம்மா பிடிச்சிருக்கேன். அது தான் என்னை கட்டிப்பிடிச்சிட்டு விட மாட்டேங்குது.''

- பி.மணியம்மாள், விளாத்திகுளம்

``கரடி பொம்மையை வாங்கி கொடுத்தது பத்தாதுன்னு தேன் பாட்டில் வேறு கேட்கிறே...''

``நீதானேம்மா கரடிக்கு தேன் ரொம்ப பிடிக்கும்னு சொன்னே.''

- பொன்.காவியா, மதுரை -16

``2,000 ரூபாய்க்கு பொருள்கள் வாங்கினா இந்த கரடி பொம்மை ஃப்ரீன்னு நீங்க சொன்னது இவ காதில விழுந்துடுச்சு... நான் 2,000 ரூபாய்க்கு பொருள்கள் வாங்கியே ஆகணும்னு அடம்பிடிக்கிறா பாருங்க...''

- தி.வள்ளி, திருநெல்வேலி - 11

ஜோக்ஸ்

``இப்போ எதுக்கு பாட்டி என்னைத் துரத்தற மாதிரி ஓடி வர்றீங்க?''

``இயர்பட்ஸ்ன்னு நினைச்சு என்னோட ஹியரிங் எய்டை மாட்டிட்டு வந்துட்டியே... கொஞ்சம் கழட்டிக் குடுத்துடும்மா!''

- பா.ஜோதிமணி, திருப்பூர்

``பாட்டி இவ்வளவு வயசான பிறகும் வாக்கிங் வர்றீங்களே... கிரேட்...''

``எப்ளாய்மென்ட்ல பதிவு செய்து இப்பதான் எனக்கு போலீஸ் வேலைக்கு வாய்ப்பு வந்திருக்கு.''

- வெ.மரகதம், கோயம்புத்தூர்-47

``ஸாரி பாட்டி... உங்க அளவுக்கு என்னால ஓடி வர முடியாது.''

``துரத்திட்டு வர்ற நாயைத் திரும்பிப் பாரு...

என்னை விட நல்லாவே ஓடுவே!"

- மா.பிரபாவதி, இடைப்பாடி, சேலம்

``ஓட ஓட தூரமே குறைய மாட்டேங்குதே பாட்டி..!''

``டிரெட்மில்ல ஓடுற மாதிரி ஒரே இடத்தில் ஓடினால் எப்படி குறையும்..?''

- செ.செளமியா, அரூர.

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் ஜோக்கு களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 7.2.2023