சினிமா
Published:Updated:

ஜோக்ஸ் - 3

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

"நீங்க எவ்வளவு நேரம் பேசுவீங்கன்னு கூட்டத்துக்கு வந்திருக்கறவங்க கேக்கறாங்க தலைவரே!"

"நம்ம கட்சியில் இருந்து விலகி நூறு உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் சேர்ந்துட்டாங்கன்னு சொன்னதும் தலைவர் அதிர்ச்சியாகிட்டாரு...?"

"பின்னே, இவ்வளவு பேர் இருந்தாங்கன்னு தெரிஞ்சா அதிர்ச்சியா தானே இருக்கும்...!"

ஜோக்ஸ் - 3

- வீரணம் சரவணன்.

"நீங்க எவ்வளவு நேரம் பேசுவீங்கன்னு கூட்டத்துக்கு வந்திருக்கறவங்க கேக்கறாங்க தலைவரே!"

"எதுக்குய்யா?"

"அலாரம் வைக்கணுமாம்!"

ஜோக்ஸ் - 3

- அஜித்

“மன்னா, எதிரி மன்னன் தன் மகனுக்குப் போர்ப்பயிற்சி தர முடிவு எடுத்திருக்கானாம்...”

“ஐயய்யோ... அப்ப நம்ம நாட்டுக்குத்தான் பழக வருவான்!”

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- மலர்சூர்யா

“வழக்கமான வெங்காயச் சட்னி மாதிரி இல்லாமல், இந்தச் சட்னி மட்டும் ஏன் இனிக்குது?”

“வெங்காயம் வாங்க வசதியில்லேன்னு ஆப்பிள் வாங்கி சட்னி அரைச்சேன்.”

ஜோக்ஸ் - 3

- ரஹீம் கஸாலி

“வரும் சட்டமன்றத் தேர்தல் வரை எங்கள் கட்சி இருக்கும் என்ற நம்பிக்கையில், ‘அப்பொழுது யாரோடு கூட்டணி வைக்கப் போகிறீர்கள்’ என்று கேள்வி கேட்ட நிருபருக்கு, எங்கள் தலைவர் இப்பொழுது சிறப்புப் பரிசு வழங்கி கௌரவிப்பார் என்பதை...”

ஜோக்ஸ் - 3

- இரா.வசந்தராசன்

“மணல்,கிரானைட் போன்ற இயற்கை வளங்கள் இருக்கும் வரை எங்கள் தலைவர் அரசியலிலும் நிலைத்திருப்பார் என்பதை...”

ஜோக்ஸ் - 3

- வேம்பார் மு.க.இப்ராஹிம்