
News
"மாப்பிள்ளை சினிமா விளம்பர ஏஜென்சி வெச்சிருக்காரா... என்ன பண்ணுவாரு?"
"தலைவர் ஏன் கூட்டணிக் கதவு மூடியே இருக்கும்னு பேசறார்..?"
"இருக்கிற கூட்டணிக் கட்சிகள் வெளியே ஓடிடக் கூடாதுன்னுதான்..."

-அதிரை யூசுப்
"மாப்பிள்ளை சினிமா விளம்பர ஏஜென்சி வெச்சிருக்காரா... என்ன பண்ணுவாரு?"
"கதை அவரோடதுன்னு கேஸ் போடுவாரு!"

- அஜித்
“பட்டப்பகல்ல அந்த வீட்ல என்ன தைரியத்தில் திருடப் போனே?”
“வீட்டு வாசல்ல கோலம் போட்டுருந்தாங்க. எப்படியும் எல்லாரும் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பாங்கங்கிற தைரியத்தில்தான்.”

- பெ.பாலசுப்ரமணி திண்டுக்கல்
“ஏம்மா, திருடன் கேட்டதும் நகையை சிரிச்சிட்டே கழற்றிக் கொடுத்தியாமே?”
“ஏதோ பிராங்க் வீடியோ எடுக்கிறாங்கன்னு நினைச்சிட்டேங்க ஐயா!”

- திருப்பூர் சாரதி