பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

“கட்சி தொடங்கணும்கிற எண்ணம் எப்படி வந்தது?”

"மன்னர் போருக்குக் கிளம்பியதும் மகாராணியர் இருவரும் அடித்துக் கொள்கிறார்களே?"

"பென்ஷன் யாருக்குன்னுதான்!"

ஜோக்ஸ் - 2

- அஜித்

“கட்சி தொடங்கணும்கிற எண்ணம் எப்படி வந்தது?”

“தொடர்ந்து நாலு படங்கள் ஃப்ளாப் ஆயிடுச்சு. அதான்!”

ஜோக்ஸ் - 2

- எஸ்.முகம்மது யூசுப்

"மது விற்பனை திட்டமிட்ட இலக்கை எட்டவில்லை என்பதால், புது வருடம் ஜனவரி 3-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுகிறது என்பதை..!'’

ஜோக்ஸ் - 2

- கி.ரவிக்குமார்

"டி.வி நேர்காணலுக்குப் போன தலைவர் ஏன் சோகமா வர்றார்?"

"செலக்ட்டானா, ஹெச்ஆர் கால் பண்ணுவாங்கன்னு கடைசில சொல்லி அனுப்பியிருக்காங்க!"

ஜோக்ஸ் - 2

- அஜித்

``தலைவர் எதுக்கு மீட்டிங்கை பீச்சுல வைக்கச் சொல்றாரு?’’

``கூட்டம் வரலைன்னாலும் மணலைப் பார்த்த சந்தோஷத்துல பேசிட்டுப் போயிடுவாரு!’’

ஜோக்ஸ் - 2

- அஜித்

``கவுன்சிலர் சார்... நீங்க கடத்தப்பட்டபோது உங்க மனநிலை எப்படி இருந்துச்சு..?”

“அப்பாடா… நம்ம வாழ்க்கையிலே

கடவுள் கண்ணைத் திறந்துட்டான்னு நினைச்சேன்..!”

ஜோக்ஸ் - 2

- பழ.அசோக்குமார்