பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 4

jokes
பிரீமியம் ஸ்டோரி
News
jokes

“ஐந்நூறு படத்துக்கு மேல நடிச்ச அந்த நடிகருக்கு இப்ப போய் ‘இது நூறாவது படம்’ன்னு விளம்பரப்படுத்தறாங்களே?!”

"தலைவரோடது மேஷ ராசிதானே... துலாம் ராசிக்குப் பணவரவுன்னு போட்டிருக்கிறதைப் பார்த்து எதுக்கு சந்தோஷப்படறாரு?"

"அது அவர் பினாமியோட ராசியாச்சே!"

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

- அஜித்

"மைக்கைப் பிடித்த அடுத்த நொடியே மைதானத்தில் வெற்றிடத்தை உருவாக்கும் என் தலைவனைப் பார்த்தா சொல்லுகிறீர், அரசியலில் வெற்றிடம் இல்லை என..!"

ஜோக்ஸ் - 4

- கி.ரவிக்குமார்

“ஐந்நூறு படத்துக்கு மேல நடிச்ச அந்த நடிகருக்கு இப்ப போய் ‘இது நூறாவது படம்’ன்னு விளம்பரப்படுத்தறாங்களே?!”

“அரசியலுக்கு வரேன்னு சொல்லிட்டு அவர் நடிச்ச நூறாவது படமாம்!”

ஜோக்ஸ் - 4

- எஸ்.எஸ்.பூங்கதிர்

"தலைவரே, உங்களை கூட்டத்துக்குக் கூப்பிட வந்திருக்காங்க."

"பேசவா?"

"இல்லை தலைவரே... நீங்க கூட்டத்தைப் பார்த்ததே இல்லைன்னு பார்க்கக் கூப்பிடறாங்களாம்."

ஜோக்ஸ் - 4

- கிணத்துக்கடவு ரவி