சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஓவியம்: பிள்ளை

``சுயசரிதை ரொம்ப போரடிக்குது தலைவரே!’’

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``இடைச்செருகலா என்னோட குற்றப்பத்திரிகைகளை அதுல போடுங்க!’’

- அம்பை தேவா

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``ஒரு ஊர்ல முயலும்

ஆமையும் இருந்ததாம்...’’

``தாத்தா,

புதுசா ஏதாச்சும் கதை சொல்லு.’’

``ஒரு ஊர்ல `ஸ்விகி’, `ஸொமோட்டோ’ன்னு ரெண்டு பேர் இருந்தாங்களாம். அவங்களுக்குள்ள கஸ்டமருக்கு முதல்ல யார் டெலிவரி பண்றதுன்னு போட்டி நடந்துச்சாம்...’’

- க.சரவணகுமார்

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``என்னைக் கட்சியை விட்டுத் தூக்கறதுக்கு சதி நடக்குதய்யா...’’

``வாய்ப்பில்லையே தலைவரே! அதுக்கெல்லாம் கட்சியில இன்னொரு ஆள் இருக்கணுமே..!’’

- ஜெ.மாணிக்கவாசகம்

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``எனக்கு வாரிசு அரசியல்ல விருப்பமே இல்லை.’’

``அப்புறம் எதுக்கு தலைவரே உங்க பையனை கட்சிக்குக் கொண்டுவந்து பொறுப்பு குடுத்தீங்க?’’

``அது ஒண்ணும் என்னோட விருப்பம் இல்லையே...

பையனோட விருப்பம்தானே...’’

- ஜெ.மாணிக்கவாசகம்