
News
"இப்படி திடீரென தலைவரைக் கைது செய்தால், அவர் திடீரென எப்படி நெஞ்சுவலி வந்ததுபோல் நடிக்க முடியும்..?"
"எனது படத்தின் வெற்றிக்குக் காரணம் கூட்டுமுயற்சியே!"
"ஆமாம்... ஏற்கெனவே வந்த நாலு அஞ்சு படத்தின் கூட்டுதானே சார்!"

- கோவை.நா.கி.பிரசாத்
"தலைவரே... நீங்க நின்ன தொகுதியில ஓட்டுக்கு இரண்டாயிரம் கொடுத்திருக்காங்க..!"
"அத மொத்தமா என்கிட்ட கொடுத்திருந்தால் அரசியலைவிட்டே விலகியிருப்பேனேய்யா..!"

- வேம்பார் மு.க.இப்ராஹிம்
"இப்படி திடீரென தலைவரைக் கைது செய்தால், அவர் திடீரென எப்படி நெஞ்சுவலி வந்ததுபோல் நடிக்க முடியும்..?"

- பர்வீன் யூனுஸ்
"நம்ம படத்துக்கு என்னய்யா ரிவ்யூ கொடுத்திருக்காங்க?"
"பத்துப் படத்துக்கு ரீமேக் ரைட்ஸ் வாங்கி பட்ஜெட் இல்லாம, ஒரே படமா எடுத்திருக்காங்கன்னு ரிவ்யூ போட்டிருக்காங்க."

- மாணிக்கம்