
News
“என் செல்போனை ஒட்டுக் கேக்குறாங்களோனு சந்தேகமா இருக்கு!”
“பதவி கிடைத்த சில மாதங்களிலேயே தனது சொந்தபந்தங்கள் அத்தனை பேரையும் தொழில் அதிபர்களாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுத்த தலைவர் அவர்களே...”

- அஜித்
“அறுபதாண்டு காலமாக நான் இந்தக் கட்சிலதான் இருக்கேன்!”
“அதனாலதான் மற்ற கட்சியெல்லாம் ஜெயிக்குது தலைவரே!”

- அஜித்
“நாங்கள் தேர்தலில் பணம் கொடுத்ததாக எதிர்க்கட்சிகள் கூறுவதில் இருந்தே தெரியவில்லையா! நாங்கள் அதிகாரத்தில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்வோம் என.. !”

- கி.ரவிக்குமார்
“என் செல்போனை ஒட்டுக் கேக்குறாங்களோனு சந்தேகமா இருக்கு!”
“எப்படி சொல்றீங்க தலைவரே!”
“நான் பேசும்போது, இடையிடையில் கைதட்டல், விசில் சத்தம் எல்லாம் கேக்குதே!”

- கி.ரவிக்குமார்