
ஓவியங்கள்: ஜெயசூர்யா
இந்த ஓவியங்களை ஆனந்த விகடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டு, வாசகர்களிடம் ஜோக்ஸ் எழுதச் சொல்லியிருந்தோம். வந்து குவிந்ததில் சிறந்த ஸ்மைலிகள்...
“போனவாரம் விளக்கேத்தியாச்சு, அதுக்கு முந்தின வாரம் கைதட்டியாச்சு இந்த வாரம் என்ன சொல்லுவாங்கன்னு டிவியை பார்த்துகிட்டு இருக்கேன்.. எனக்கும் பொழுது போகணும்ல்ல... “
Jerry Darvey fb
மனைவி : “ என்னங்க இந்த சேனலை போடறீங்க?”
கணவன் : “ மத்த சேனல்ல பார்த்த பழசை போடறான். இதுலதான் நாம பார்க்காத பழசை போடறான்.”
_கிணத்துக்கடவு ரவி.
“என்னங்க! இரண்டு நாளா பீலா ராஜேஷ் ஒரே கலர்ல சேலை கட்டிக்கிட்டு இருக்காங்க....?”
“அப்போ, இத்தனை நாளா நீ கொரோனா நியூஸ் பார்க்கலை... அவங்க கட்டி இருக்கிற சேலையைதான் பார்த்தீயாடி?”
- மலர்சூர்யா.

பழைய தொலைக்காட்சி நிகழ்ச்சி எல்லாம் ரசிச்சு பார்க்குறீங்க .. ஒரு நாள் பழைய சாப்பாடு பழைய குழம்பு சாப்பிட சொன்னா மட்டும் ஆத்திரம் வருது..!
@KayathaiS
“எனக்கென்னவோ நாம 15 வருஷத்துக்கு பின்னே போன மாதிரியிருக்குடி..”
“எதனால அப்படி சொல்றீங்க? “ “எல்லா டிவி சேனல்களேயும் பழைய நிகழ்ச்சிகளை போட ஆரம்பிச்சுட்டாங்களே..
*வெ.இராம்குமார் facebook
“ ஏங்க ... மாவும் பிசைஞ்சு தரமாட்டேங்கிறீங்க...எனக்கு பிடித்த சேனலையும் பாக்க விட மாட்டேங்கிறீங்க...கொரோனா அட்ராஸிட்டியை விட உங்க அடராஸிட்டியை தாங்க
முடியல....!”
Marimuthukumar Ponnusamy facebook
“பேசாம அடுப்பை இங்கேயே எடுத்து வந்து வச்சிக்கலாம்னு நினைக்கிறேன்!”
தாரை செ.ஆசைத்தம்பி face