ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அவள் விகடன் 20.12.2022 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“எப்பவாவது ஒண்ணு ரெண்டு நாய் உள்ளே போய்ப் படுக்கறது சகஜம்தான்... அதுக்காக தினமும் காலைல ஆபீஸ் போகும்போது உங்க வீட்டு நாயை உள்ளே விட்டுட்டுப் போகலாமான்னு நீங்க கேக்கறது ரொம்ப ஓவர் மேடம்!” - கோமதி வைத்தியநாதன், மதுரை-14

“ஏம்மா, நான் இங்கே செக்யூரிட்டி வேலைதான் பார்க்கிறேன். அதுக்காக உங்க வீட்டுக்காரர் பணம் எடுக்க வரும்போதெல்லாம் உங்களுக்கு போன் பண்ண சொல்றது நல்லாயில்லே.” - இல.தமிழ்க்குயில், சங்கராபுரம்

“லட்சுமி, விநாயகர் படம் போட்ட ரூபா நோட்டு இந்த ஏடிஎம்ல வருதுன்னு உங்களுக்கு யாரோ ராங் இன்ஃபர்மேஷன் குடுத்திருக்காங்க மேடம்...” - மகா, திருப்பூர்

“என்னப்பா வாட்ச்மேன் ஏடிஎம்ல பணமில்லையா!”

``மாசக்கடைசி எல்லா இடத்துலயும் `டைட்'தான்!’’ - மஹஜூதா, சேலம்

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் ஜோக்கு களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 27.12.2022