ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அவள் விகடன் 3.1.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“உங்க கடையில ஒரு கிலோ சுகர் வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போய் பார்த்தப்ப 800 கிராம் தானே இருக்கு!”

“நீங்க நடந்துதானே வீட்டுக்குப் போனீங்க, நடந்தா சுகர் குறையும்னு உங்களுக்குத் தெரியாதாம்மா!”

- எச்.சீதாலட்சுமி, ஆலுவா, கேரளா

“எதுக்கு நியாய விலைக் கடைக்காரர் அநியாயத்துக்குக் கத்தறார்?”

“என் பையன் வண்டுகளைப்பத்தி ஆராய்ச்சி பண்றான். உங்க கடைக்கு அழைச்சுட்டு வரட்டுமான்னு கேட்டேன்.”

- ஜானகி சுப்பிரமணி, சென்னை-20

“கடைக்காரர் ஏன் இப்படி எரிஞ்சு விழறார்?”

“நியாய விலைக் கடை போர்டுல `நியாய'த்துக்கு முன்னாடி எவனோ ஒருத்தன் ‘அ’ங்கிற எழுத்தை சேர்த்துட்டானாம்!”

- எஸ்.சாந்தி, சென்னை-129

மூணு வருஷமா பொங்கல் பரிசே வாங்கலை... மொத்தமா சேர்த்துக் குடுங்க.”

“ரெண்டு வருஷத்துக்கு முன்ன வந்த அரிசி, பருப்பு, வெல்லம் எல்லாம் இருக்கு... வேணுமா?!”

- ஷாந்தி, திருச்சி

அவள் விகடன் 3.1.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“ஏன் பாட்டி இன்னும் மாஸ்க்கை மாட்டிக்கிட்டே இருக்கே?”

“அதனாலதான் இன்னும் இருக்கேன்!”

- ப. உமாமகேஸ்வரி, நெய்வேலி

“என்ன பாட்டி... பக்கத்துல இருக்கற பஜாருக்குப் போறதுக்கு மாஸ்க்கெல்லாம் போட்டுட்டீங்க..?”

“சாதா பஜாரா இருந்தா பரவாயில்ல... அது ‘சைனா' பஜாராச்சே..!”

- மகா, திருப்பூர்

“பழையபடி கொரோனா வரப்போகுதாம். இது பழைய மாஸ்க். என் புடவைக்கு மேட்சா புது மாஸ்க்கை ஆன்லைனில் ஆர்டர் போட்டுக்கொடுடீம்மா!”

- க.விண்ணரசி, திருவாரூர்

“மீண்டும் கொரோனா வருதுன்னு முன்கூட்டியே மாஸ்க் மாட்டிட்டீங்களா பாட்டி?”

“கண்ட இடத்தில் வெத்தலை போட்டு துப்பறேன்னு என் பேத்தி மாட்டின மாஸ்க் இது!”

- சுபானுமதி கணேசன், ஏனங்குடி, நாகை

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் ஜோக்கு களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 10.1.2023