ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஒவ்வொன்றும் பரிசு ரூ.300 பெறுகிறது

அவள் விகடன் 17.1.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“இதோ பாரும்மா... ‘துபாய் குறுக்கு சந்து’ன்னு இங்கே ஒரு சந்துகூட கிடையாது. யாரோ தப்பான அட்ரஸ் கொடுத்திருக்காங்க!”- ஜி.ரிஹானா பர்வீன், வேலூர்

“இந்த தெருவுல மெக்கானிக் ஷாப் எங்கேய்யா இருக்கு?''

“தெரியலையேம்மா!''

“டாஸ்மாக் பக்கத்தில இருக்குன்னு சொன்னாங்களே!''

“அப்படி விவரமா கேளு... கரெக்டா சொல்றேன்!''- எஸ்.சாந்தி, சென்னை-129

“ஏம்பா லைசென்ஸ் எடுக்க `8' போட சொல்றாங்களே... எப்படிப்பா போடணும்?"

“முதல்ல ஒழுங்கா `ஸ்டாண்டு' போட்டுக் கத்துக்க.''- தோ.புஷ்பராணி, திருத்துறைப்பூண்டி

அவள் விகடன் 17.1.2023 (சென்ற) இதழில் கீழே உள்ள படத்தை வெளியிட்டு ஜோக்ஸ் கேட்டிருந்தோம். வாசகர்கள் பகிர்ந்திருந்தவற்றில் தேர்வானவை இங்கே...

ஜோக்ஸ்

“ஒரு இன்விடேஷனுக்கு ஒருத்தர்தான் அனுமதி. இப்படி கலர் ஜெராக்ஸ் எடுத்துட்டு ரெண்டு பேரெல்லாம் வரக்கூடாதும்மா!”
- பா.ஜோதிமணி, திருப்பூர்


“மேக்கப் போட, பியூட்டி பார்லருக்கு போக வேண்டாம்னு சொன்னேன் கேட்டியா... கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் கிளம்பிட்டாங்களாம்.” - ஜானகி பரந்தாமன், கோவை-36

“ஏம்மா... மண்டபம் மாறி வந்து ஃபுல் கட்டுக் கட்டிட்டு... இப்ப பத்திரிகையைக் காட்டி, போக வேண்டிய இடத்துக்கு வழி கேக்கறீங்களே... நியாயமா?” - கோமதி வைத்தியநாதன், மதுரை-14

“எதுக்கு பரிசு கவரைப் பிரிச்சுக் காட்ட சொல்றீங்க?”

“மூத்த பொண்ணு கல்யாணத்துலே ரொம்ப பேரு வெறும் கவரைக் கொடுத்துட்டுப் போயிட்டாங்களாம் மேடம்!”
- எம்.காஞ்சனாகரன், சென்னை-53

ஜோக்ஸ்

இந்தப் படங்களுக்கேற்ற ஜோக்குகளை எழுதி அனுப்புங்கள்... `இது என்னுடைய சொந்தப் படைப்பு. வேறு எந்த ஒரு பத்திரிகை நிறுவனம், இணையதள மீடியா, சமூக ஊடகங்களுக்கு இதை நான் இதுவரையில் அனுப்பவில்லை' என்கிற உறுதிமொழியுடன் உங்கள் படைப்புகளை அனுப்பி வைக்கவும். பிரசுரமாகும் ஜோக்கு களுக்குக் காத்திருக்கிறது ரொக்கப் பரிசு!

அனுப்ப வேண்டிய முகவரி: அவள் விகடன்,

757, அண்ணாசாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

கடைசி தேதி: 24.1.2023