கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ்: யுவர்ஸ்- ஹியூமர்லி !

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஓவியம்: ஜெயசூர்யா

இந்த ஓவியத்தை ஆனந்த விகடன் சமூகவலைதளங்களில் பதிவிட்டு, வாசகர்களிடம் ஜோக்ஸ் எழுதச் சொல்லியிருந்தோம். வந்து குவிந்ததில் சிறந்த ஸ்மைலிகள்...

“ட்ரோனை பீட் பண்ணி, யாரு முதல்ல நம்ம தெருவுக்குள்ள போறோம்னு பார்ப்போமா..?”

-கே.லக்‌ஷ்மணன்

சிரிச்ச முகத்தோட ஓடுறா. அப்பதான் டி.வில கெத்தா தெரியுவோம்”

@ARiyasahmed

ன்னும் கொஞ்ச தூரம் அப்படியே மெதுவா போக்கு காட்டிட்டே வாங்கடா, தள்ளாட ஆரம்பிச்சுடுச்சு. கீழே விழுந்ததும் எடுத்துக்கலாம்.

@JaNeHANUSHKA

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

டேய், ஓடிப்பிடிடா..ட்ரோன்ல பூவெல்லாம் தூவுறாங்களாம்..கொண்டுபோய் அம்மாகிட்ட குடுத்து நல்லபேரு வாங்கலாம்.

G.M.ANANDI

“நல்ல வேளை, இன்னைக்கு கிழிஞ்ச ட்ரெஸ் நாம் போடலை....!”

“ஆமாண்டா, இல்லேன்னா டிவியில நம்ம மானம் போயிடும்!”

S.S.POONKATHIR

ஆளுக்கு ஒரு பக்கமா ஓடுங்கடா... அப்பத்தான் யாரைத் துரத்துறதுன்னு கன்ஃபூஸ் ஆகி அது திரும்பிப் போயிடும்

Viji Kumaran

டேய் பக்கத்துல வராதடா, சமூக இடைவெளிய மெயின்டைன் பண்ணு”

Riyaz Ahmed

”என்னத் தேடி வருவாங்கன்னு சொன்னேன்ல... எப்படிடா?!

நேத்துதான் தப்பிச்சு வந்தேன், ஹாஸ்பிட்டல்ல இருந்து. அடப்பாவி... டேய் எல்லாரும் ஓடுங்கடா”

Vigneswaran R