கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

ஜோக்ஸ்: யுவர்ஸ் ஹியூமர்லி!

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஓவியம்: ஜெயசூர்யா

“நீ பைக்கில் போற வேகத்தைப் பார்த்தால், கொரோனாவைவிட, உன்கூட பைக்கில் வருவதுதான் ஆபத்துபோல...”

அமுது அரட்டை, பொள்ளாச்சி. 4

“எப்பவும் உன்னை மட்டுமே என்னோட பைக்குல வெச்சு சுத்துறதைப் பார்த்தே, எல்லாருக்கும் நான் ஒரு ‘90-ஸ் கிட்ஸ்’னு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் பாட்டி..!”

மயக்குநன்

@KLAKSHM14184257

“மெதுவா போடா...’’

“7 மணிக்குள்ள போய்ச் சேரணும்...”

“வீட்டுக்கா?”

“இல்லம்மா, ‘டாஸ்மாக்’ல எங்களுக்குக் கொடுத்திருக்கற டைம்.”

கயத்தை சத்யா

@kayathaisathya

“என்ன பாட்டி, மாஸ்க் போடாம லிப்ட் கேட்டு வந்திருக்க?”

“நீ மட்டும் ஹெல்மெட் போட்டிருக்கியா... ரோட்டைப் பாத்துப் போடா’’

எம். விக்னேஷ்

யுவர்ஸ் ஹியூமர்லி!
யுவர்ஸ் ஹியூமர்லி!

``ஏப்பா தம்பி, வண்டிக்கு இன்ஷூரன்ஸ் ஆர்சி புக் எல்லாமே இருக்குதுல்ல?’’

``வண்டியைத் திருடும் போது அதெல்லாம் பாக்குற பழக்கம் எனக்கு இல்லை பாட்டி.’’

- பெ.பாலசுப்ரமணி திண்டுக்கல்

என்னடா பின்னாடி உட்காரும் சீட் இவ்வளவு சின்னதா இருக்கு. இதிலெல்லாம் எப்படித்தான் இந்த பொம்புள புள்ளைக உட்கார்ந்து போகுதோ...?!

ரஹீம் கஸ்ஸாலி @RahimGazzali

“என்னைய ஏன்டா கூட கூட்டிட்டுச் சுத்துற?”

“உனக்கு உடம்பு சரியில்லை டீரீட்மென்ட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிதான் டிராவல் பாஸ் வாங்கியிருக்கேன்.”

Viji Kumaran @VijiKumaran1

‘`எதுக்கு டியர் இந்த அம்மா கெட்டப்?’’

`‘ட்ரோன் வந்தாக்கூட நம்மைத் துரத்தாது.’’

S.KARUNAKARAN @skkaran14321700

``மலை மேல ஏறத் தேவையில்லைடா... சீட்டுல உட்கார்ந்துட்டுப் பார்த்தாலே நல்லாத் தெரியுது.’’

சுதன்.தம்பி @sudhansts