ஆனந்த விகடன் பொக்கிஷம்
கட்டுரைகள்
Published:Updated:

வெடிங்க சிரிங்க!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

ஓவியங்கள்: நெடுமாறன்

தீபாவளி வந்தாச்சு. இந்தமாதிரிப் பட்டாசுகளும் வந்தா கலகலப்பா விறுவிறுப்பா இருக்கும்ல?

வெடிங்க சிரிங்க!

ஸ்டாலின் - உதயநிதி டபுள் ஷாட் வெடி (பேமிலிபேக்)

வெடிங்க சிரிங்க!

OPS மார்க் ஓலைப்பட்டாசு. (குட்டியாய் வளைந்த திரியோடு இருக்கும். இலவசமாய் இன்னும் குட்டியாய் `கல்வெட்டு' பிராண்டு ஓலைப்பட்டாசு பார்க்க ரவீந்திரநாத்தைப்போலவே இருக்கும்!)

வெடிங்க சிரிங்க!

EPS மார்க் ஊசிச் சரவெடி. கால்களுக்கிடையில் மட்டுமே வெடிக்கும். (ரொம்ப ஆபத்தானது)

வெடிங்க சிரிங்க!

25 வருடங்களாகச் சுற்றிக்கொண்டேஇருக்கும் ரஜினி மார்க் சங்கு சக்கரம்! (வெறும் காத்துதாங்க வருது!)

வெடிங்க சிரிங்க!

மோடி பிராண்ட் ரோல்கேப். சீன பார்டரில் துப்பாக்கியில் நிரப்பி அப்பப்போ எல்லையில் ராணுவ வீரர்கள் என்று டொப் டொப்பு எனச் சுடும்! (இதை வாங்கினால் ஒரு டஜன் வடை இலவசம்!)

வெடிங்க சிரிங்க!

கமல் - கவிதைப் பூந்தொட்டி பற்றவைத்ததும் புரியாத மொழியில் கவிதை சொல்லியபடியே... வர்ணஜாலம் காட்டும் பூந்தொட்டி (மய்யத்தில் வைங்க!)

வெடிங்க சிரிங்க!

ராகுல் - சோனியா - தவுசண்ட் கோஷ்டிவாலா - எப்போது வெடித்தாலும் ஆயிரம் கோஷ்டிகளாகப் பிரிந்து வெடிக்கும்

வெடிங்க சிரிங்க!

புஹுஹா என சத்தத்தோடு சீறும் சீமான் பாம்பு மாத்திரை. (கறிக்குழம்பு இருக்கிற ரூம்ல வெச்சுடாதீங்க!)

வெடிங்க சிரிங்க!

குஷ்பு ராக்கெட். ஆமாம்பா. ஜாக்பாட்டில் குஷ்பு ஜாக்கெட் பாப்புலர். இப்போ குஷ்பு ராக்கெட் அதைவிட பாப்புலர். ஒவ்வொரு வீட்டுக்கூரையா தாவும்!