Published:Updated:

விற்பனை செய்த வீட்டில் கிடைத்த லாக்கர், புதையல் ஆசையில் முட்டிக்கொண்ட உரிமையாளர்கள்- என்ன நடந்தது?

இரும்பு லாக்கர்
News
இரும்பு லாக்கர்

புதிய உரிமையாளருக்கும், பழைய உரிமையாளருக்கும் இடையில் லாக்கர் யாருக்குச் சொந்தம் என வாக்குவாதம் நிகழ்ந்தது. மண்ணில் இருந்து எடுக்கப்பட்டதால் அரசுக்கே சொந்தம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Published:Updated:

விற்பனை செய்த வீட்டில் கிடைத்த லாக்கர், புதையல் ஆசையில் முட்டிக்கொண்ட உரிமையாளர்கள்- என்ன நடந்தது?

புதிய உரிமையாளருக்கும், பழைய உரிமையாளருக்கும் இடையில் லாக்கர் யாருக்குச் சொந்தம் என வாக்குவாதம் நிகழ்ந்தது. மண்ணில் இருந்து எடுக்கப்பட்டதால் அரசுக்கே சொந்தம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இரும்பு லாக்கர்
News
இரும்பு லாக்கர்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் தேவனகொண்டா பகுதியில் உள்ள கிருஷ்ணா ரெட்டி என்பவரின் பழைமையான வீட்டை நரசிம்முலு என்ற நபர் வாங்கி உள்ளார். பழைமையான வீடு என்பதால், ஜேசிபி மூலம் அதனை இடித்து சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.

வீடு
வீடு

வீட்டை இடித்துக் குழி தோண்டியபோது, அங்கே ஒரு டன் எடையுள்ள இரும்பு லாக்கர் ஒன்று கிடைத்துள்ளது. நான்கைந்து பேர் சேர்த்து நகர்த்தினால் ஒழிய, அந்த லாக்கரை அசைக்க முடியாது. அதன் உள்ளே தங்கமும் வைரமுமாகப் புதையல் இருக்கும் எனப் பலரும் நம்பினர். இந்தச் செய்தி அக்கம் பக்கத்தினருக்குக் காட்டுத்தீ போலப் பரவத் தொடங்கியது. 

உடனடியாக அந்த இடத்திற்குக் காவல் துறையினரும் விரைந்தனர். வீட்டின் தற்போதைய உரிமையாளர், வீட்டை விற்றவரைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வீட்டின் புதிய உரிமையாளருக்கும் பழைய உரிமையாளருக்கும் இடையே, லாக்கர் யாருக்குச் சொந்தம் என வாக்குவாதம் ஏற்பட்டது. மண்ணில் இருந்து எடுக்கப்பட்டதால் அரசுக்கே சொந்தம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

லாக்கரில் இருந்த பெட்டி!
லாக்கரில் இருந்த பெட்டி!

நிலைமை இப்படி நீடிக்க, லாக்கரில் இருந்த பூட்டையும் திறக்க இயலவில்லை. ஒரு வழியாகப் பூட்டு உடைக்கப்பட்டு லாக்கர் திறக்கப்பட்டது. ஆவலோடு லாக்கரின் ஒவ்வொரு பெட்டியையும் திறக்க, அதனுள் பழைய பேப்பர்களே இருந்துள்ளன.

`சோனமுத்தா போச்சா’ என்பது போல இந்தச் சம்பவம் முடிந்துள்ளது. இல்லாத புதையலுக்கு இவ்வளவு போராட்டமா?