Published:Updated:

சூப்பர் ஓவர் சைனி... மீண்டு வந்த கோலி... துரத்தி, மிரட்டிய மும்பை! #RCBvMI

சூப்பர் ஓவரில் மீண்டு 2020 சீசனின் இரண்டாவது வெற்றியைப் பெற்றிருக்கிறது பெங்களூரு. மும்பை வெர்ஸஸ் பெங்களூரு ஆட்டத்தின் ஹைலைட்ஸ் இங்கே! #RCBvMI

ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றியோடு தொடங்கிய கோலியின் பெங்களூரு, அடுத்தப்போட்டியிலேயே பஞ்சாபுக்கு எதிராக 97 ரன்களில் தோல்வியடைந்து பழைய ஃபார்முக்குப்போனது. இந்நிலையில் மும்பையின் வெற்றி உறுதி என எல்லோரும் எதிர்பார்க்க மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறது பெங்களூரு. அதுவும் எப்போதும் பெளலிங்கில் கோட்டைவிடும் பெங்களுரூ, சூப்பர் ஓவரில் சைனியால் வெற்றிபெற்றிருக்கிறது.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவில் கோலியைத்தவிர மற்ற மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அரைசதம் அடிக்க, வாஷிங்டன் சுந்தர் பவர்ப்ளே ஓவர்களில் மும்பையை முடக்க, இறுதியில் இஷான் கிஷானும், பொலார்டும் பெங்களூரு பெளலர்களை அடித்து துரத்த, சூப்பர் ஓவரில் மீண்டு 2020 சீசனின் இரண்டாவது வெற்றியைப் பெற்றிருக்கிறது பெங்களூரு. மும்பை வெர்சஸ் பெங்களூரு ஆட்டத்தின் ஹலைட்ஸ் இங்கே!

1. இந்த ஐபிஎல் முழுக்கவே டாஸின் போது எடுக்கப்படும் தவறான முடிவுகள்தான் பேசுபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். துபாயில் நடந்த இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மா டாஸை வென்று ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்து மேட்சை பெங்களூருவிடம் கொடுத்தார்.

கொரோனா காலத்தில் ஐபிஎல்... எப்படி இருக்கிறது? மக்கள் கருத்து இதுதான்! #VikatanPollResults

2. மிகத்தெளிவான கேம் பிளானோடு வந்தார் கோலி. விக்கெட் கீப்பர் ஃபிலிப்பின் இடம் பேட்டிங் ஆர்டரில் தேவையில்லாத ஆணி என்பதை உணர்ந்து, ஃபிலிப்பைத் தூக்கிவிட்டு அவருக்கு பதில் ஆல்ரவுண்டரான குர்கிரீத் சிங்கை கொண்டுவந்தார். விக்கெட் கீப்பிங் பணி ஏபிடி-யிடம்கொடுக்கப்பட்டது. இரண்டு போட்டிகளாக அடி வாங்கிக்கொண்டிருந்த டேல் ஸ்டெய்னுக்கு பதில் ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா அணிக்குள் வந்திருந்தார். அதேபோல் உமேஷ் யாதவுக்கு பதிலாக இசுரு உடனாவை அணிக்குள் கொண்டுவந்தார் கோலி. மும்பை திவாரிக்கு பதிலாக இஷான் கிஷனை அணிக்குள் கொண்டுவந்திருந்தது. பஞ்சாபுக்கு எதிராக செய்த தவறுகளை உணர்ந்து உடனடியாக மூன்று மாற்றங்களை செய்திருந்த கோலிக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் காத்திருந்தது.

3. படிக்கலும், ஃபின்ச்சும் ஓப்பனிங் இறங்கினார்கள். படிக்கல் ஆரம்பத்தில் கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு சுற்றி சில பவுண்டரிகள் அடிக்க, இன்னொருபக்கம் ஃபின்ச் ஃபார்முக்கு வந்து வெளுத்துக்கொண்டிருந்தார். ட்ரென்ட் பெளல்ட்டின் ஓவரில் சிக்ஸரோடு வேட்டையைத்தொடங்கிய ஃபின்ச், சஹாரின் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார். பவர்ப்ளேவின் முடிவில் விக்கெட்டுகள் இழக்காமல் 59 ரன்களை அடித்திருந்தது பெங்களூரு.

#RCBvMI
#RCBvMI

4. ஃபின்ச் 35 பந்துகளில் 52 ரன்கள் அடித்திருந்தபோது லாங் ஆஃபில் ஒரு சிக்ஸருக்கு ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். விக்கெட்டை எடுத்தவர் பௌல்ட். 1 டவுன் பேட்ஸ்மேனாக கோலி வந்தார். சில நிமிடங்கள் களத்தில் நின்றார். 3 ரன்களோடு டக் அவுட்டுக்கு அவசரமாகத் திரும்பினார். கோலியின் விக்கெட்டை எடுத்தவர் சுமார் ஸ்பின்னரான ராகுல் சஹார். கோலி சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆனாலும், படிக்கலோடு சேர்ந்து பெங்களூருவின் ரன்ரேட்டை உயர்த்த ஆரம்பித்தார் ஏபி டி வில்லியர்ஸ். பாயின்ட்டில் ஒரு பவுண்டரி அடித்து 37 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார் படிக்கல். விளையாடிய மூன்று போட்டிகளில் படிக்கல் அடித்திருக்கும் இரண்டாவது அரை சதம் இது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

5. ஃபின்ச், படிக்கல் என இருவரும் அரை சதம் அடித்து அவுட் ஆக, ஏபிடி தொடர்ந்து களத்தில் நின்று கலவரங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தார். பும்ராவின் 19வது ஓவரில் 2 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 17 ரன்கள் அடித்தார். இந்த ஓவரில் சிக்ஸரோடு 23 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அரை சதத்தை முடித்தார். பேட்டின்சனின் கடைசி ஓவரில் துபே, பார்ட்டியில் காக்டெய்ல் கலந்து ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடிக்க 201 ரன்களோடு இன்னிங்ஸை முடித்தது.

#RCBvMI
#RCBvMI

6. 202 ரன் டார்கெட்டை மும்பை நெருங்கிவிடாமல் தடுக்கும் முயற்சியில் பவர் ப்ளேவிலேயே இறங்கினார் கோலி. இசுரு உடானாவோடு பெளலிங்கைத் தொடக்கிய கோலி, இரண்டாவது ஓவரிலேயே ஆஃப் ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தரிடம் பந்தைக்கொடுத்தார். ரோஹித்தின் விக்கெட்டை சுந்தர் வீழ்த்த, பவர்ப்ளேவில் பவர் இல்லாமல் திணற ஆரம்பித்தது மும்பை.

7. கடைசி இரண்டு போட்டிகளில் வாஷிங்டன் சுந்தரை பவர்ப்ளே ஓவர்களில் அதிகம் பயன்படுத்தாத கோலி, நேற்றைய மேட்ச்சில் பவர் ப்ளேவுக்குள்ளேயே மூன்று ஓவர்களை சுந்தரிடம் கொடுத்தார். ரோஹித்தின் விக்கெட்டையும் எடுத்து வெறும் 7 ரன்களை மட்டுமே கொடுத்து பவர்ப்ளே ஓவர்களில் ரன் எடுக்க முடியாமல் மும்பையை முடக்கினார் சுந்தர். பவர் ப்ளேவில் ரோஹித், யாதவ் என இரண்டு விக்கெட்டுகளை இழந்து 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது மும்பை.

தீயாய் சிக்ஸர்கள் கொளுத்திய ராகுல் திவேதியா யார் என்று தெரியுமா? #RahulTewatia #RRvKXIP

9. சுந்தர், சஹால், ஸாம்பா எனத் தன்னிடம் இருக்கும் மூன்று ஸ்பின்னர்களையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி கேப்டன்ஸி திறமைகளைக் காட்டினார் கோலி. பெங்களூரு வெற்றிபெறப்போகிறது என எல்லோரும் நம்ப ஆரம்பித்த தருணத்தில்தான் இஷான் கிஷனும், பொல்லார்டும் வழக்கம்போல பெங்களூரு பெளலர்களை துன்புறத்த ஆரம்பித்தார்கள். சஹால், ஸாம்பா இருவருக்கும் பாராபட்சம் இல்லாமல் அடி விழுந்தது. 9 சிக்ஸர்கள் அடித்தார் இஷான் கிஷன்.

#RCBvMI
#RCBvMI

ஸாம்பாவின் ஒரே ஓவரில் 27 ரன்கள் அடித்தார் பொல்லார்ட். மேட்ச் மும்பை பக்கம் திரும்பியது. கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே தேவை என ஸ்கோர் கார்டு காட்டியது. கடைசி இரண்டு ஓவர்களை சைனியும், உடானாவும் வீசினார்கள். ஒரு சிக்ஸரைத்தவிர சைனியின் 19வது ஓவரில் பொல்லார்ட், கிஷனால் பெரிதாக ரன் அடிக்கமுடியவில்லை. கடைசி ஓவரில் 19 ரன் அடிக்கவேண்டும். முதல் இரண்டு பந்துகளில் சிங்கிள் மட்டுமே போக, மூன்றாவது, நான்காவது பந்துகளை சிக்ஸர்களாக்கினார் கிஷன். 2 பந்தில் 5 ரன்கள் அடிக்கவேண்டும் என டார்கெட் இருந்தபோது 99 ரன்னில் கிஷன் அவுட். கடைசிப்பந்தில் பவுண்டரி அடித்து மேட்ச்சை டை ஆக்கினார் பொல்லார்ட். சூப்பர் ஓவர் ஆரம்பித்தது.

10. பொல்லார்டும், ஹர்திக்கும்தான் மும்பையின் சூப்பர் ஓவர் ஓப்பனர்கள். நவ்தீப் சைனிதான் பெளலர். பெங்களூரு பெளலரா இது என வியந்துபார்க்கவைத்தார். பொல்லார்டின் விக்கெட்டையும் எடுத்து, வெறும் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து கோலி அண்ட் ஏபிடியிடம் மேட்ச்சைக் கொடுத்தார் சைனி. மும்பைக்கு பும்ராவே சூப்பர் ஓவரை வீசினாலும் கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து மேட்ச்சை வெற்றியோடு முடித்துவைத்தார் கோலி.

வாழ்த்துகள் கோலி அண்ட் கோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு