கே.சி.பழனிச்சாமியிடம் காசு வாங்கியவர்கள் லிஸ்ட்!

கரூர் கலக்கம்

''நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கரூரில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மணல் கொள்ளையில் ஈடுபட்டுவரும் தி.மு.க. எம்.பி-யான கே.சி.பழனிச்சாமியை  சிறையில் அடைப்போம்!'' - நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது அரவக்குறிச்சியில் ஜெயலலிதா இப்படித்தான் அறைகூவல் விட்டார். இப்போது கைதுப் படலத்தை நடத்திவிட்டார் முதல்வர்.

மாயனூரில் உள்ள தனது மில்லில் கே.சி.பழனிச்சாமி இருந்தபோது கடந்த 19-ம் தேதி மதியம் திடீரென அங்கு வந்த போலீஸார், அவரைக் கைது செய்து எட்டு வழக்குகள் போட்டு இருக்கிறார்கள். குளித்தலை குற்றவியல் நடுவர் எண் - 2 நீதிமன்ற நீதிபதி, செப்டம்பர் 3-ம் தேதி வரை அவரைக் காவலில் வைக்க உத்தரவு போட்டார். இதன் அடிப்படையில் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கில் சம்பந்தப்பட்ட கே.சி.பி-யின் உதவியாளர் சுந்தரேசன், மேலாளர் கிரிராஜ், செந்தில்ராஜா, சசிக்குமார், குமார் மற்றும் ராஜா ஆகிய ஆறு பேரை போலீஸ் தேடி வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்